/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
எதிர்க்கட்சிகளிடம் ஒற்றுமை இல்லாததால் கடந்த தேர்தலில் பா.ஜ., வெற்றி பெற்றது அமைச்சர் பெரியகருப்பன் பேட்டி

ADDED : ஏப் 20, 2024 05:14 AM
சிவகங்கை: கடந்த லோக்சபா தேர்தலில் எதிர்க்கட்சிகளிடம் ஒற்றுமையில்லாத காரணத்தால் தான் பா.ஜ., 33 சதவீத ஓட்டுக்களை பெற்று, மோடி பிரதமராக தேர்வு செய்யப்பட்டார்,'' என சிவகங்கை அருகே அரளிக்கோட்டையில் அமைச்சர் பெரியகருப்பன் தெரிவித்தார்.
அவர் கூறியதாவது: பா.ஜ., ஆட்சி பிரதமர் மோடி தலைமையில் 10 ஆண்டு காலம் இருந்து, நாட்டை மிகப்பெரிய பின்னடைவுக்கு தள்ளி விட்டனர்.
குறிப்பாக தமிழ்நாடு, தமிழ் மக்கள், மொழியை வஞ்சிக்கும் பிரதமராக இருந்தார். அதை மக்களிடம் முதல்வர் ஸ்டாலின் பிரசார யுக்தியால், மக்களிடம் கொண்டு சென்று அவர் கூறிய கருத்துக்களால் ஆதரவு பெருகி, தமிழ்நாடு, புதுச்சேரி உட்பட 40 தொகுதியிலும் இண்டியா கூட்டணி வெற்றி பெறும்.
ஆட்சி மாற்றத்திற்கான அறிகுறி வட, தென் இந்தியாவில் தென்படுகிறது. முதல்வரின் திட்டங்கள் அனைவருக்கும் சேர்ந்துள்ளது. காங்., தலைமையில் ஆட்சி அமைக்கப்படும் பட்சத்தில் அறிக்கையில் கூறிய திட்டங்கள் செயல்படுத்தப்படும். மக்கள் வரவேற்கும், மக்களுக்கு பயனுள்ள திட்டங்களை காங்., ஆட்சி தரும்.பிரதமர் மோடி கடந்த தேர்தலில் வீழ்த்தப்பட்டிருக்க வேண்டும். எதிர்கட்சிகளிடத்தில் ஒற்றுமை இல்லாத காரணத்தால், இந்தியா முழுவதும் 33 சதவீத ஓட்டுக்களை பெற்று பிரதமராக ஆனார். எதிர்கட்சிகள் சிதறி கிடந்ததால் தான் கடந்த தேர்தலில் வெற்றி பெற்றுள்ளார்.
* சிவகங்கையில் அமைச்சர் ராஜகண்ணப்பன் கூறியதாவது: தமிழ்நாடு, புதுச்சேரியில் 40 தொகுதியிலும் இண்டியா கூட்டணி வெற்றி பெற்று நாடும் நமதே, நாற்பதும் நமேத என்பதை முதல்வர் ஸ்டாலின் தலைமையில் நிரூபிப்போம்.