/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
சிவகங்கை கலெக்டர் அலுவலகத்திற்கு புதிய கட்டடம் கட்டும் பணி கிடப்பில்
/
சிவகங்கை கலெக்டர் அலுவலகத்திற்கு புதிய கட்டடம் கட்டும் பணி கிடப்பில்
சிவகங்கை கலெக்டர் அலுவலகத்திற்கு புதிய கட்டடம் கட்டும் பணி கிடப்பில்
சிவகங்கை கலெக்டர் அலுவலகத்திற்கு புதிய கட்டடம் கட்டும் பணி கிடப்பில்
ADDED : மே 18, 2024 05:42 AM
சிவகங்கை : சிவகங்கை கலெக்டர் அலுவலகத்திற்கு வேலுநாச்சியார் மாளிகை அருகே புதிய கட்டடம் கட்ட பொதுப்பணித்துறையினர் அக்கறை காட்டாததால், திட்ட அறிக்கையோடு கிடப்பில் போடப்பட்டுள்ளது.
ராமநாதபுரத்தில் இருந்து சிவகங்கையை தலைமையிடமாக கொண்டு 1984 ல் புதிய மாவட்டம் உருவாக்கினர். அக்கால கட்டத்தில் கலெக்டர் அலுவலகத்திற்கென ஒருங்கிணைந்த கட்டடம் கட்டப்பட்டது. கலெக்டர் அலுவலக வளாகத்தில் கலெக்டர், டி.ஆர்.ஓ., அலுவலகம், பொதுப்பணி, நெடுஞ்சாலை, வனத்துறை அலுவலகம், மாவட்ட கருவூலகம், கல்வித்துறை அலுவலகங்கள் என வட்டவடிவிலான ஒருங்கிணைந்த கட்டடங்கள் இங்கு உள்ளது.
இக்கட்டடம் கட்டி 40 ஆண்டான நிலையில், உரிய பராமரிப்பின்றி சிதிலமடைந்து வருகின்றன. குறிப்பாக கூரைகள் பெயர்ந்து விழுவது வாடிக்கையாகி வருகிறது. இந்நிலையில் கலெக்டர் அலுவலகம் உள்ளிட்ட சில அலுவலகங்கள் மட்டுமே இடிந்த பகுதியை பூசி, பெயின்ட் அடித்து வைத்துள்ளனர்.
கலெக்டர் அலுவலகத்திற்கு தனியாக புதிய கட்டடம் கட்ட கடந்த சில ஆண்டிற்கு முன்பிருந்த கலெக்டர் மதுசூதன்ரெட்டி திட்ட அறிக்கை தயாரிக்க பொதுப்பணித்துறைக்கு உத்தரவிட்டார். கலெக்டர், டி.ஆர்.ஓ., மாவட்ட அலுவலர் அலுவலகங்களுக்கென வேலுநாச்சியார் மாளிகைக்கு அருகே உள்ள காலியிடத்தில் புதிய கட்டடம் கட்டுவதற்கு திட்ட அறிக்கை தயாரித்து அரசுக்கு அனுப்பியுள்ளனர். அலுவலக கட்டுமான பணி திட்ட அறிக்கைக்கு இன்னும் ஒப்புதல் கிடைக்காமல், இத்திட்டம் கிடப்பில் போடப்பட்டுள்ளது. இதனால் பழைய கலெக்டர் அலுவலக கட்டடம் எப்போது இடிந்து விழுமோ என்ற அச்சத்தில் ஊழியர்கள் பணி செய்து வருகின்றனர்.

