/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
இலவச வீட்டு மனை பட்டா பல ஆண்டாக இழுத்தடிப்பு
/
இலவச வீட்டு மனை பட்டா பல ஆண்டாக இழுத்தடிப்பு
ADDED : மார் 04, 2025 06:18 AM

சிவகங்கை: திருப்புத்துார் அருகே கல்வெட்டு மேடு பகுதியில் நரிக்குறவர்கள் 173 குடும்பத்தினர் வசிக்கின்றனர். இவர்களில் வீடற்ற 73 குடும்பத்தினருக்கு இலவச வீட்டு மனை பட்டா மற்றும் வீடு வழங்க வேண்டும் என கோரிக்கை வைத்தனர்.
இதற்காக நெற்குப்பை அருகே இடம் தேர்வு செய்த நிலையில், அங்கு நிலம் எடுப்பதில் பிரச்னை ஏற்பட்டது. இதனால், 73 குடும்பத்தினருக்கும் பட்டாவை குன்றக்குடி அருகே தேர்வு செய்து தருவதாக உறுதி அளித்தனர்.
நரிக்குறவர்கள் குடும்பத்தினர் 73 பேர்களுக்கு குன்றக்குடி அருகே இலவச வீட்டு மனை பட்டா தருவதாக தெரிவித்து பல ஆண்டுகளான நிலையில், இன்னும் குன்றக்குடி பகுதியில் நிலத்தை தேர்வு செய்து, பட்டா வழங்கவில்லை.
இதனால், கல்மேடு பகுதியில் இடநெருக்கடியில் தவித்து வருவதாக கல்மேடு பகுதி நரிக்குறவர் வகுப்பை சேர்ந்த ரசியா என்ற பெண் தலைமையில் பாதிக்கப்பட்டவர்கள் கலெக்டர் ஆஷா அஜித்திடம் மனு அளித்தனர்.