/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
பயணிகளை நடுரோட்டில் பரிதவிக்க விட்ட அரசு பஸ்
/
பயணிகளை நடுரோட்டில் பரிதவிக்க விட்ட அரசு பஸ்
ADDED : ஜூலை 16, 2024 04:05 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருப்புவனம், : மதுரையில் இருந்து திருப்புவனம் வழியாக ராமேஸ்வரம் சென்ற அரசு பஸ் (டி என் 63 என் 1825) மாரநாடு பாலம் அருகே பழுதாகி நின்றது.
பஸ்சில் பயணம் செய்த பெண்கள்,கைக்குழந்தைகளுடன்அடுத்த பஸ்சிற்காக காத்து கிடந்தனர். அடுத்தடுத்து வந்த பஸ்களிலும் கூட்டம் அதிகமாக இருந்ததால் ஏற முடியவில்லை. பல பஸ்களில் போதிய இடம் இல்லாததால் ஐந்து பயணிகளாக அடுத்தடுத்து வந்த பஸ்களில் ஏற்றி அனுப்பினர்.
பழுதாகி பஸ்கள் நிற்பதுடன் பயணிகளுக்கும், கண்டக்டர்களுக்கும் இதனால் வாக்குவாதம் ஏற்படுகிறது. போக்குவரத்து கழகங்கள் பஸ்களை போதிய பராமரிப்பு செய்து இயக்க வேண்டும் என்று பயணிகள் எதிர்பார்க்கின்றனர்.