ADDED : ஜூலை 10, 2024 04:30 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சிங்கம்புணரி : சிங்கம்புணரியில் பாசன வயல்களில் அமர்ந்து மது அருந்திவிட்டு அங்கேயே பாட்டில்களை போட்டுச் செல்வதால் விவசாயிகள் அதிருப்தியில் உள்ளனர்.
இப்பேரூராட்சி பகுதியை சுற்றி 8 க்கும் மேற்பட்ட மதுபான கடைகள் உள்ளன. இவற்றில் மது வாங்கி அருகே உள்ள வயல்களில் அமர்ந்து மது அருந்துவதை 'குடி'மகன்கள் வழக்கமாகக் கொண்டுள்ளனர். இதை தட்டிகேட்கும் விவசாயிகளை அவர்கள் தாக்கவும் வருகின்றனர்.
மேலும் மது அருந்திவிட்டு பாட்டில்களை வயல்களில் அப்படியே விட்டு செல்கின்றனர். அவை உடைந்து விவசாய பணியில் ஈடுபடும் போது விவசாயிகளின் கால்களை பதம் பார்க்கின்றன.
போலீசார் புறநகர் பகுதியில் ரோந்து சென்று திறந்தவெளியில் மது அருந்துபவர்களை எச்சரித்து அனுப்ப வேண்டும்.