/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
சிவகங்கையில் ஆக்கிரமிப்பால் தொடர் விபத்துதொடரும் உயிர் பலியால் வாகன ஓட்டிகள் அச்சம்
/
சிவகங்கையில் ஆக்கிரமிப்பால் தொடர் விபத்துதொடரும் உயிர் பலியால் வாகன ஓட்டிகள் அச்சம்
சிவகங்கையில் ஆக்கிரமிப்பால் தொடர் விபத்துதொடரும் உயிர் பலியால் வாகன ஓட்டிகள் அச்சம்
சிவகங்கையில் ஆக்கிரமிப்பால் தொடர் விபத்துதொடரும் உயிர் பலியால் வாகன ஓட்டிகள் அச்சம்
ADDED : மே 04, 2024 05:15 AM

சிவகங்கை: சிவகங்கை நகரில் பல இடங்களில் ரோட்டின் இரு புறங்களிலும் வைக்கப்பட்டுள்ள கடைகளின் விளம்பர பலகைகள்,தெருவோரக்கடைகளின் ஆக்கிரமிப்பால் ரோடு குறுகி தொடர் விபத்து நடக்கிறது.
சிவகங்கை நகராட்சியில் 27 வார்டுகள் உள்ளன. இங்கு 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர். நகரின் மையப்பகுதியில் பஸ் ஸ்டாண்ட் உள்ளது. பஸ் ஸ்டாண்டை சுற்றிலும் ஆக்கிரமித்துள்ள கடைகளால் வாகனங்கள் செல்வதற்கு இடையூறாக உள்ளது.
மேலும் நகரின் முக்கிய கடை வீதிகளாக நேரு பஜார், காந்தி வீதி, அரண்மனை வாசல், மஜித் ரோடு உள்ளது. இந்த பகுதியில் உள்ள பெரும்பாலான கடைகள் ரோடு வரை ஆக்கிரமித்துள்ளனர்.
குறிப்பாக குறுகிய ரோடான மஜித்ரோடு வழியாக கலெக்டர் அலுவலகம் சென்று திரும்பும் அரசு பஸ்கள் அனைத்தும் செல்கிறது. இந்த ரோட்டில் உள்ள ஆக்கிரமிப்பால் கடுமையான போக்குவரத்து நெரிசலும் அடிக்கடி விபத்தும் ஏற்படுகிறது.
அதே போல் பஸ் ஸ்டாண்ட் முதல் தொண்டி ரோட்டில் நகராட்சி அலுவலகம் வரை ரோட்டின் இருபுறமும் வாகன ஆக்கிரமிப்பு அதிகமாக உள்ளது. கடந்த ஒரு மாதத்திற்கு முன் அரண்மனை வாசல் சண்முகராஜா கலையரங்கம் அருகில் கட்டட தொழிலாளி ஒருவர் விபத்தில் உடல் நசுங்கி பலியானார். அதே இடத்தில் கடந்த 6 மாதாத்திற்கு முன்பு ஒரு ஆசிரியர் பலியானார். நேற்று ஆயுதப்படை குடியிருப்பு ரோட்டில் சிறுமி ஒருவர் விபத்தில் பலியானார்.
சிவகங்கை நகரில் பெருகியுள்ள ஆக்கிரமிப்பு குறித்து நகராட்சி அதிகாரிகளுக்கோ, நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகளுக்கோ கவலை இல்லாததால் விபத்துக்கள் தொடர்ந்து நடக்கிறது. மாவட்ட நிர்வாகமும் இதை பற்றி கவலைப்படுவதாக இல்லை.