ADDED : ஆக 29, 2024 05:12 AM
கீழடி: கீழடியில் வைகை உழவர் குழு சார்பில் விதை திருவிழா செப்டம்பர் 1ம் தேதி நடைபெற உள்ளது. பாரம்பரிய விதை ரகங்களை மீட்டெடுக்கும் முயற்சியாக நடைபெறும் விழாவில் ஒருங்கிணைந்த ராமநாதபுர மாவட்டத்தைச் சேர்ந்த பாரம்பரிய நெல் ரகமான தில்லைநாயகம் நெல் ரக அரிசியை பயன்படுத்தி உணவு வகைகள் தயாரிக்கப்பட உள்ளன.
ஒருங்கிணைப்பாளர் கருணாகர சேதுபதி கூறுகையில் : ஒருங்கிணைந்த ராமநாதபுர மாவட்ட பாரம்பரிய நெல் ரகங்களில் 20 சிறந்த ரகங்கள் தேர்வு செய்யப்பட்டு அதன் விதைகள் ஒவ்வொரு விவசாயிக்கும் தலா இரண்டு கிலோ இலவசமாக வழங்கப்பட உள்ளது.
விதை பரவல் என்ற திட்ட அடிப்படையில் இலவசமாக இவை வழங்கப்படும் நிலையில் அடுத்தாண்டு நடைபெற உள்ள விதை திருவிழாவில் விவசாயிகள் தலா நான்கு கிலோ விதை நெல் கொண்டு வந்து வழங்க வேண்டும்.
பரவலாக பாரம்பரிய நெல் ரகங்கள் பரவ தொடங்கி விடும். காலை ஏழு மணிக்கு கீழடியில் இருந்து முளைப்பாரி ஊர்வலம் தொடங்கி பசியாபுரம் ரயில்வே கேட் அருகே உள்ள தனியார் திருமண மண்டபம் வரை நடைபெறுகிறது.அதன்பின் விதை திருவிழா தொடங்குகிறது, என்றார்.