/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
எதிர்க்கட்சியாக இருந்தால் கோஷம் தான் எந்த திட்டமும் வராது: பா.ஜ., வேட்பாளர்
/
எதிர்க்கட்சியாக இருந்தால் கோஷம் தான் எந்த திட்டமும் வராது: பா.ஜ., வேட்பாளர்
எதிர்க்கட்சியாக இருந்தால் கோஷம் தான் எந்த திட்டமும் வராது: பா.ஜ., வேட்பாளர்
எதிர்க்கட்சியாக இருந்தால் கோஷம் தான் எந்த திட்டமும் வராது: பா.ஜ., வேட்பாளர்
ADDED : ஏப் 04, 2024 04:06 AM
மானாமதுரை, : எதிர்க்கட்சியாக இருக்கும்போது எம்.பி.,யாக இருந்ததால் தொகுதிக்கு ஒன்றும் செய்ய முடியவில்லை. அவையில் கோஷம் தான் போட முடியும் என கார்த்தி கூறுகிறார்.
இந்த முறையும் கார்த்திக்கை ஆதரித்தால் இத்தொகுதிக்கு வசதிகள் எப்படி வரும் என பா.ஜ., வேட்பாளர் தேவநாதன் கேள்வி எழுப்பினார்.
மானாமதுரை பழைய பஸ் ஸ்டாண்ட், தேவர் சிலை, கன்னார்தெரு, அரசு மருத்துவமனை எதிர்புறம் உள்ளிட்ட பகுதிகளில் பிரசாரம் மேற்கொண்ட பா.ஜ., கூட்டணி சிவகங்கை வேட்பாளர் தேவநாதன் பேசியதாவது: இத்தொகுதியில் 7 முறை எம்.பி.,யாக தேர்ந்தெடுக்கப்பட்ட சிதம்பரம் அடிப்படை வசதிகளை கூட நிறைவேற்றவில்லை.
தமிழகத்திலேயே மிகவும் பின் தங்கிய பகுதியாக சிவகங்கை உள்ளது. தொழிற்சாலை இல்லாத காரணத்தினால் இளைஞர்கள் வேலை தேடி வெளியூர் மற்றும் வெளிநாடுகளுக்குச் செல்லும் நிலை உள்ளது.
இத்தொகுதியில் உள்ள அடிப்படை பிரச்னைகளை சரி செய்ய நடவடிக்கை எடுப்பேன்.
எதிர்க்கட்சியாக இருக்கும்போது எம்.பி.,யாக இருந்ததால் தொகுதிக்கு ஒன்றும் செய்ய முடியவில்லை.
அவையில் கோஷம் தான் போட முடியும் என கார்த்தி கூறுகிறார். இந்த முறையும் கார்த்திக்கை ஆதரித்தால் இத்தொகுதிக்கு வசதிகள் எப்படி வரும்.
இந்த முறையும் காங்., எதிர்க்கட்சியாகத்தான் வரும். பிரதமராக மோடி 3வது முறையாக பதவியேற்பார் என்றார்.
பா.ஜ., மாவட்ட தலைவர் சத்தியநாதன், துணைத் தலைவர்கள் சுரேஷ் சுகனேஸ்வரி மானாமதுரை நகர தலைவர் நமகோடி, ஒன்றிய தலைவர் ரவிச்சந்திரன், இளையான்குடி ஒன்றிய தலைவர் ராஜ பிரதீப் நிர்வாகிகள் சங்கரசுப்பிரமணியன், முருகானந்தம் மற்றும் கூட்டணி கட்சியினர் பலர் கலந்து கொண்டனர்.

