/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
கீழடியில் ஒரே நேரத்தில் குவிந்த மாணவியர்
/
கீழடியில் ஒரே நேரத்தில் குவிந்த மாணவியர்
ADDED : ஆக 22, 2024 02:48 AM

கீழடி: கீழடி அருங்காட்சியகம் மற்றும் திறந்த வெளி அருங்காட்சியகங்களை காண ஒரே நேரத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் வந்தனர்.
கீழடி அருங்காட்சியகத்திற்கு நேற்று காலையில் இருந்து காரைக்குடி, மதுரை, அருப்புக்கோட்டை, ராஜபாளையம், திருச்சி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து பள்ளி, கல்லுாரி மாணவ, மாணவியர் ஆயிரக்கணக்கானோர் வந்திருந்தனர். ஒரே நேரத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர், சுற்றுலா பயணிகள் வந்ததால் திறந்த வெளி அருங்காட்சியகம், கீழடி அருங்காட்சியகங்களில் நெரிசல் ஏற்பட்டது.
மதுரை சேர்மத்தாய் வாசன் மகளிர் கல்லுாரி மாணவிகள் கூறுகையில்: தமிழகத்தை சேர, சோழ, பாண்டிய மன்னர்கள் ஆண்டதாக வரலாறு, ஒவ்வொரு மன்னருக்கும் கொடி, சின்னம் ஆகியவை உண்டு, மதுரையை ஆண்ட பாண்டிய மன்னருக்கு மீன் கொடி சின்னம் உண்டு, அகழாய்வில் மீன் உருவம் பதித்த உறைகிணறு, பானை ஒடு உள்ளிட்டவைகள் கண்டறியப்பட்டு அதனை காட்சிப்படுத்தியுள்ளனர். பாடத்திட்டத்தில் படித்த பொருட்களை நேரில் காணும் போது பரவசம் ஏற்படுகிறது, என்றனர்.