/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
செயற்கை இழை மைதானம் ஹாக்கி ஆர்வலர்கள் ஆர்வம்
/
செயற்கை இழை மைதானம் ஹாக்கி ஆர்வலர்கள் ஆர்வம்
ADDED : மே 10, 2024 04:48 AM
சிவகங்கை: சிவகங்கை மாவட்டத்தில் ஹாக்கி விளையாட்டுக்கு இளைய தலைமுறையினரிடையே ஆர்வம் அதிகரித்துள்ளதால் சிவகங்கையில் செயற்கை இழை மைதானம் அமைக்க வேண்டும் என ஹாக்கி ஆர்வலர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
சென்னை மட்டுமின்றி, மதுரை, துாத்துக்குடி, ராமநாதபுரம் உள்ளிட்ட நகரங்களில் சர்வதேச தரத்தில் ஹாக்கி மைதானங்கள் உருவாக்கப்பட்டு விட்டன. ஆனால் சிவகங்கையில் இன்னும் உருவாக்கப்படவில்லை.
சிவகங்கையில் சர்வதேச தரத்தில் ஹாக்கி விளையாட்டு மைதானம் அமைக்க வேண்டும் என்பது நீண்ட கால கோரிக்கை. பள்ளிகள், கல்லுாரிகளில் மற்றும் கிளப் அணிகளில் இருந்து மாநில, தேசிய அளவிலான ஹாக்கி போட்டிகளில் சிவகங்கை மாவட்டத்தில் இருந்து வீரர் வீராங்கனைகள் பங்கேற்று வருகின்றனர்.
இவர்களை சர்வதேச போட்டிகளில் பங்கேற்க செய்ய வேண்டும் என்ற எண்ணத்திலும் இந்த கோரிக்கை வலுப்பெற்றுஉள்ளது. சிவகங்கை மாவட்டத்தில் செயற்கை இழை மைதானம் அமைக்க அரசு நடவடிக்கை எடுத்தால் பல தேசிய அணி வீரர்களை இங்கு உருவாக்க முடியும்.
யங் சேலஞ்சர்ஸ் ஹாக்கி கிளப் நாகு மணிகண்டன் கூறுகையில், சிவகங்கை மாவட்ட விளையாட்டு அரங்கில் உள்ள ஹாக்கி மைதானம் செம்மண் தரை. இங்கு தான் மாணவர்கள் பயிற்சி பெறுகின்றனர். இங்கு பயிற்சி பெறும் மாணவர்கள் மாநில தேசிய அளவிலான போட்டிகளில் கலந்து கொண்டு விளையாடும் போது அங்கு செயற்கை இழை மைதானத்தில் விளையாட மிகவும் சிரமப்படுகின்றனர்.
எனவே அரசு சிவகங்கை விளையாட்டு அரங்கில் உள்ள செம்மண் ஹாக்கி மைதானத்தை செயற்கை இழை மைதானமாக மாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.