/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
திருப்புவனத்தில் வெயில், மழை மாறி மாறி நிலவிய சீதோஷ்ணம்
/
திருப்புவனத்தில் வெயில், மழை மாறி மாறி நிலவிய சீதோஷ்ணம்
திருப்புவனத்தில் வெயில், மழை மாறி மாறி நிலவிய சீதோஷ்ணம்
திருப்புவனத்தில் வெயில், மழை மாறி மாறி நிலவிய சீதோஷ்ணம்
ADDED : மார் 02, 2025 05:33 AM
திருப்புவனம்: திருப்புவனத்தில் நேற்று வெயில், மழை என மாறி மாறி நிலவிய சீதோஷ்ண நிலையால் பொதுமக்கள், சிறு வியாபாரிகள் பாதிக்கப்பட்டனர்.
தமிழகத்தில் காற்றின் வேக மாறுபாடு காரணமாக ராமநாதபுரம், சிவகங்கை உள்ளிட்ட மாவட்டங்களில் மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.
நேற்று காலை ஆறு மணிக்கு பலத்த காற்றுடன் கூடிய கனமழை 15 நிமிடம் பெய்தது.
அதன்பின் சாரல் மழை இருந்த நிலையில் ஏழு மணிக்கு வெயிலின் தாக்கம் கடுமையாக இருந்தது.
சிறிது நேரத்திலேயே மீண்டும் மழை பெய்தது.
நேற்று முழுவதும் மாறி மாறி மழையும் வெயிலும் சுழன்றடித்ததில் சாலையோர சிறு வியாபாரிகள், பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர்.