/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
சிவகங்கையில் பெயர் நீக்கம் அதிகம்
/
சிவகங்கையில் பெயர் நீக்கம் அதிகம்
ADDED : ஏப் 21, 2024 04:15 AM
சிவகங்கை: சிவகங்கை லோக்சபா தொகுதியில் வாக்காளர் பட்டியலில் இருந்து பெயர் நீக்கம், முறையாக பூத் சிலிப் வழங்காதது, வாக்காளர் விழிப்புணர்வு வழங்காதது போன்ற காரணத்தால் கடந்த 3 தேர்தலில் தொடர்ந்து ஓட்டுப்பதிவு சதவீதம் குறைந்து கொண்டே செல்கிறது.
இத்தொகுதியில் சிவகங்கை, காரைக்குடி, திருப்புத்துார், மானாமதுரை (தனி), ஆலங்குடி, திருமயம் ஆகிய 6 சட்டசபை தொகுதிகள் உள்ளன. கடந்த 2014 தேர்தலில் 14 லட்சத்து 12 ஆயிரத்து 373 வாக்காளர்களில், 10 லட்சத்து 18 ஆயிரத்து 994 பேர் ஓட்டளித்ததில், 72.75 சதவீத ஓட்டுக்கள் பதிவாகியுள்ளன. 2019 தேர்தலில் 15 லட்சத்து 52 ஆயிரத்து 19 வாக்காளர்களில், 10லட்சத்து 81 ஆயிரத்து 167 பேர் 69.90 சதவீதம் ஓட்டளித்தனர்.
2024 தேர்தலில் 16 லட்சத்து 33 ஆயிரத்து 857 வாக்காளர்களில், 10 லட்சத்து 49 ஆயிரத்து 675 பேர் 64.25 சதவீத ஓட்டளித்துள்ளனர். இத்தொகுதியில் கடந்த 3 முறை நடந்த தேர்தலிலும் தொடர்ந்து ஓட்டுப்பதிவு சதவீதம் குறைந்து கொண்டே வருகிறது. கடந்த 2014 ல் 72.75 சதவீதத்தில் இருந்து, 2019 ல் 2.85 சதவீதம் குறைந்து, அத்தேர்தலில் 69.90 சதவீதம் பதிவானது. 2024 தேர்தலில் 5.65 சதவீதம் குறைந்து, 64.25 சதவீதமாக பதிவாகியுள்ளது.
வா க்காளர் நீக்கத்தால் அதிர்ச்சி
இத்தொகுதியில் ஓட்டுப்பதிவு குறைந்து கொண்டே வருவதால் தேர்ந்தெடுக்கப்படுபவர்கள் தொகுதிக்கு ஒன்றும் செய்யவில்லை என்ற அதிருப்தி காரணமாகவும், மாவட்ட அளவில் சரியாக வாக்காளர் விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை வாக்காளர்களிடம் கொண்டு சேர்க்காதது, முறையாக பூத் சிலிப் வழங்காதது.
மேலும் அனைத்து வேட்பாளர்களும் தொகுதி முழுவதும் பிரசாரத்திற்கு செல்லாதது, குறிப்பாக ஒரு ஓட்டுச்சாவடிக்கு 10 முதல் 30 வாக்காளர்களின் பெயர்களை பட்டியலில் இருந்து நீக்கியது போன்ற காரணங்கள் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. இது போன்ற காரணத்தால் ஓட்டுப்பதிவு கடுமையாக குறைந்துவிட்டது.

