/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
ரேஷனில் பருப்பு வினியோகம் இல்லை ஞாயிறன்று கடை இருந்தும் வீண்
/
ரேஷனில் பருப்பு வினியோகம் இல்லை ஞாயிறன்று கடை இருந்தும் வீண்
ரேஷனில் பருப்பு வினியோகம் இல்லை ஞாயிறன்று கடை இருந்தும் வீண்
ரேஷனில் பருப்பு வினியோகம் இல்லை ஞாயிறன்று கடை இருந்தும் வீண்
ADDED : செப் 03, 2024 05:07 AM
சிவகங்கை : சிவகங்கை மாவட்டத்தில், ஞாயிறன்று செயல்பட்ட ரேஷன் கடைகளில் பொருட்களின்றி கார்டுதாரர்கள் ஏமாற்றத்துடன் திரும்பினர்.
மாவட்ட அளவில் 800க்கும் மேற்பட்ட ரேஷன் கடைகள் இயங்குகின்றன. இதில் 4.80 லட்சம் குடும்பதாரர்கள் பொருட்களை வாங்கி செல்கின்றனர்.
கடந்த சில மாதங்களாக பாமாயில், பருப்பு வினியோகத்தில் தாமதம் ஏற்பட்டதால், முந்தைய மாத பருப்பு, பாமாயிலை அடுத்த மாதத்தில் பெற்றுக் கொள்ளலாம் என கூட்டுறவு துறை அறிவித்து வந்தது.
இந்நிலையில் ஆக., மாதத்திற்கான பருப்பு, பாமாயில் உட்பட அனைத்து பொருட்களையும், விடுமுறை நாளான செப்., 1 ஞாயிறன்று பெற்றுக் கொள்ளலாம். இதற்காக ஞாயிறன்று ரேஷன் கடை செயல்படும் என அறிவித்தனர்.
இதனை நம்பி, ரேஷன் கடைகளுக்கு கார்டுதாரர்கள் சென்றனர். ஆனால், அவர்களுக்கு பெரும் ஏமாற்றம் அளிக்கும் விதமாக, விற்பனையாளர்கள் அரிசி மட்டுமே இருப்பதாகவும், மற்ற பொருட்கள் வரவில்லை எனக்கூறி கார்டுதாரர்களை திருப்பி அனுப்பினர். கார்டுதாரர்கள் அன்றைய தினம் பொருட்களை வாங்க முடியாமல் ஏமாற்றம் அடைந்தனர்.
விசாரணை
கூட்டுறவு துறை அதிகாரி கூறியதாவது: ஆக., மாதத்திற்கான பாமாயில், துவரம் பருப்பை பெற்றுக் கொள்வதற்காக தான், செப்., 1 ஞாயிறன்று கடை திறக்கப்பட்டது.
இதற்காக ஆக., 26ம் தேதியே அனைத்து பொருட்களும் கடைகளுக்கு வழங்கப்பட்டு விட்டன. ஏன் பொருட்கள் இல்லை என தெரிவித்தார்கள் என்பது குறித்து விசாரிக்கப்படும் என்றனர்.