/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
குடிநீரும் இல்லை தொட்டியும் இல்லை கோடையில் தவிக்கும் மக்கள்
/
குடிநீரும் இல்லை தொட்டியும் இல்லை கோடையில் தவிக்கும் மக்கள்
குடிநீரும் இல்லை தொட்டியும் இல்லை கோடையில் தவிக்கும் மக்கள்
குடிநீரும் இல்லை தொட்டியும் இல்லை கோடையில் தவிக்கும் மக்கள்
ADDED : மே 03, 2024 05:42 AM
சிங்கம்புணரி: சிங்கம்புணரியில் ஒன்றரை மாதமாக குடிநீரும் கிடைக்காமல், குளியல் தொட்டியும் இல்லாமல் மக்கள் அவதிப்படுகின்றனர்.
இப்பேரூராட்சியில் 18 வது வார்டுக்குட்பட்ட அம்பேத்கர் நகர் கிழக்கு குடியிருப்பில் 80 க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசிக்கின்றனர்.
இப்பகுதி மக்களுக்கு குடிநீர் விநியோகிப்பதற்காக அமைக்கப்பட்டிருந்த குழாய் பழுதாகி கடந்த ஒன்றரை மாதமாக குடிநீர் விநியோகம் பாதிக்கப்பட்டுள்ளது.
அனைத்து வீடுகளிலும் சிறிய தொட்டி தண்ணீரையே பயன்படுத்துகின்றனர். கோடை பாதிப்பு காரணமாக அந்த தண்ணீரும் பற்றாக்குறையாக உள்ளது.
கூலித்தொழிலாளர்களாக இருந்தும் வேறு வழியில்லாமல் குடிநீரை விலைகொடுத்து வாங்கி பயன்படுத்துகின்றனர்.
இப்பகுதிக்கென்று தனியாக குளியல் தொட்டி கட்டித்தர அதிகாரிகளிடம் குடியிருப்புவாசிகள் மனு அளித்தும் நடவடிக்கை இல்லை.
கோடையில் இருந்து மீள உடனடியாக குடிநீர் இணைப்பையும், குளியல் தொட்டியையும் அமைத்துத்தர அப்பகுதி மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.