/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
இளையான்குடியில் குடிநீர் சப்ளை இல்லை
/
இளையான்குடியில் குடிநீர் சப்ளை இல்லை
ADDED : ஏப் 28, 2024 06:05 AM
இளையான்குடி : இளையான்குடி சுற்று வட்டார பகுதிகளில் ஒரு மாதத்திற்கு ஒருமுறை சப்ளை செய்யப்படும் காவிரி கூட்டு குடிநீர் தற்போது வெயில் காலம் என்பதால் மாதத்திற்கு 2 முறை விநியோகம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
இளையான்குடி பேரூராட்சி, ஊராட்சி ஒன்றியத்துக்குட்பட்ட 55 ஊராட்சிக்குட்பட்ட கிராமங்களுக்கு திருச்சியிலிருந்து ராமநாதபுரம் செல்லும் காவிரி கூட்டு குடிநீர் திட்டத்தின் மூலம் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின் மூலம் மேற்கண்ட பகுதிகளில் மாதத்திற்கு ஒருமுறை குடிநீர் வினியோகம் செய்யப்படும் நிலையில் தற்போது கடந்த சில மாதங்களாக இத்திட்டத்தில் பதிக்கப்பட்ட குழாய்களில் ஆங்காங்கே உடைப்பு ஏற்படும் காரணத்தினால் சில பகுதிகளில் குடிநீர் வினியோகம் செய்யப்படுவதில்லை.
மக்கள் குடிநீர் கிடைக்காமல் சிரமப்பட்டு வருகின்றனர்.
தனியார் வண்டிகளில் வரும் குடிநீரை ஒரு குடம் ரூ.15 கொடுத்து வாங்கி பயன்படுத்தி வருகின்றனர். மக்கள் சிலர் கூறுகையில், இளையான்குடி பேரூராட்சிக்குட்பட்ட பகுதிகளிலும் சுற்று வட்டார கிராம பகுதிகளிலும் நிலத்தடி நீர் உப்பு மற்றும் உவர்ப்பு தன்மையுடன் இருப்பதால் குடிநீர் கிடைக்காமல் மிகுந்த சிரமப்பட்டு வருகிறோம்.
காவிரி கூட்டு குடிநீர் திட்டத்தின் மூலம் மாதத்திற்கு ஒருமுறை விநியோகம் செய்யப்படும் குடிநீரை முறையாக விநியோகம் செய்யாததால் குடிநீர் கிடைக்காமல் அவதிக்குள்ளாகி வருகிறோம்.
காவிரி கூட்டு குடிநீர் திட்ட அதிகாரிகள் தற்போது கோடை காலம் என்பதால் குடிநீரின் தேவை அதிகம் என்பதால் மாதத்திற்கு 2 முறையாவது குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று வேண்டுகோள் விடுத்து வருகின்றனர்.

