/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
நாட்டரசன்கோட்டையில் மின்சாரம் இல்லை கருகி வரும் 3 ஆயிரம் வாழைகள்
/
நாட்டரசன்கோட்டையில் மின்சாரம் இல்லை கருகி வரும் 3 ஆயிரம் வாழைகள்
நாட்டரசன்கோட்டையில் மின்சாரம் இல்லை கருகி வரும் 3 ஆயிரம் வாழைகள்
நாட்டரசன்கோட்டையில் மின்சாரம் இல்லை கருகி வரும் 3 ஆயிரம் வாழைகள்
ADDED : ஆக 03, 2024 04:57 AM

சிவகங்கை: சிவகங்கை அருகே நாட்டரசன்கோட்டையில் மும்முனை மின்சாரம் வராததால்,3 ஏக்கரில் நடவு செய்த 3000 வாழை மரங்களுக்கு தண்ணீர் பாய்ச்ச முடியாமல் கருகி வருவதாக புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாட்டரசன்கோட்டை ஒக்கூர் ரோட்டை சேர்ந்தவர் மூத்த விஞ்ஞானி ரங்கராஜன் 84. ஓய்வுக்கு பின் கடந்த 20 ஆண்டாக நாட்டரசன்கோட்டையில் விவசாயம் செய்து வருகிறார்.
விவசாய நிலங்களுக்கு பயன்படுத்த மும்முனை மின் சப்ளைக்கான இணைப்பு பெற்றுள்ளார். கடந்த 10 ஆண்டாக இவரது மின் இணைப்பிற்கு மும்முனை மின் சப்ளை இல்லை.
தொடர்ந்து மின்வாரியம் மற்றும் கலெக்டர் அலுவலகத்தில் பல முறை புகார் செய்தும் நடவடிக்கை இல்லை. மின்வாரிய அதிகாரிகளிடம் புகார் செய்தபின், உதவி மின்பொறியாளர் இவரது நிலத்தில் உள்ள மின் இணைப்பை பார்வையிட்டு, புதிதாக டிரான்ஸ்பார்மர் பொருத்த வேண்டும்.
அதற்கு பின் சரியான அளவில் மும்முனை மின்சப்ளை கிடைக்கும் என தெரிவித்து சென்றுள்ளார்.
மூத்த விஞ்ஞானி கே.ரங்கராஜன் கூறியதாவது: கடந்த 12 ஆண்டாக மின்வாரியத்திடமும், மின்வாரிய அதிகாரிகளிடம் முறையிட்டு வருகிறேன். தற்போது முதல்வரின் தனிப்பிரிவுக்கும் புகார் அனுப்பிவிட்டேன். இது வரை மும்முனை மின்சாரம் சப்ளை கிடைப்பதற்கான புதிய டிரான்ஸ்பார்மரை பொருத்தாமல், இழுத்தடித்து வருகின்றனர்.
இதனால் ரூ.1.5 லட்சம் செலவில் நடப்பட்ட 3000 வாழை மரங்கள் கருகி வருகின்றன. விவசாயத்தை காக்க நாட்டரசன்கோட்டை அருகே ஒக்கூர் ரோட்டில் புதிய டிரான்ஸ்பார்மரை விரைந்து பொருத்த வேண்டும், என்றார்.