/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
வேட்பாளர் யார் என சிந்தித்து முடிவெடுங்கள்: கார்த்தி எம்.பி.,
/
வேட்பாளர் யார் என சிந்தித்து முடிவெடுங்கள்: கார்த்தி எம்.பி.,
வேட்பாளர் யார் என சிந்தித்து முடிவெடுங்கள்: கார்த்தி எம்.பி.,
வேட்பாளர் யார் என சிந்தித்து முடிவெடுங்கள்: கார்த்தி எம்.பி.,
ADDED : ஏப் 17, 2024 06:57 AM
திருப்புத்துார் : திருப்புத்துாரில் சிவகங்கை தொகுதி காங்.,வேட்பாளர் கார்த்தி பிரசாரம் செய்தார்.
அவர் பேசுகையில், நான் யாரையும் விரோதித்தோ, சார்ந்தோ நடந்தது கிடையாது. நான் தனி நபர் விவகாரத்தில் தலையிட்டேன் என்று கேள்விப்பட்டுள்ளீர்களா. குறிப்பாக நான் வேட்பாளர்கள் பற்றி பேசுவதில்லை.
நீங்கள் எதற்காக எம்.பி.யைத் தேர்வு செய்கிறீர்கள். லோக்சபாவில் பொதுக்கருத்தை, தொகுதி, மாநில, தேசிய விஷயங்களை பேச வேண்டும். இந்தியாவின் ஒட்டுமொத்த விஷயங்களையும் பேச, தீர்மானிக்க 543 எம்.பி.,க்களை தேர்வு செய்கிறோம்.
இங்கு போட்டியிடும் வேட்பாளர்கள் பொது மேடையில் பொதுக்கருத்தை பேசியுள்ளார்களா. எந்தவிதமான கருத்தையும் பதிவு செய்யாதவர்கள். லோக்சபாவில் பேச பொருத்தமில்லாதவர்கள். நான் லோக்சபாவில் தொகுதிக்காக, தமிழகத்திற்காக, நாட்டிற்காக பேசியுள்ளேன். என்னால் தீர்க்கமாக சிந்தித்து நடுநிலையுடன் என் கருத்தைத் தெரிவிக்க முடியும்.
வேட்பாளர் யார் என்பதை தெரிந்து சிந்தித்து முடிவெடுங்கள். தொகுதி நிதியை சமமாக 6 தொகுதிகளுக்கும் ஒதுக்கியுள்ளேன் என்றார்.

