/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
கிடப்பில் திருக்கோஷ்டியூர் - சுண்ணாம்பிருப்பு விரிவாக்க ரோடு; தேசிய நெடுஞ்சாலையில் குறுகிய மேம்பாலத்தால் சிக்கல்
/
கிடப்பில் திருக்கோஷ்டியூர் - சுண்ணாம்பிருப்பு விரிவாக்க ரோடு; தேசிய நெடுஞ்சாலையில் குறுகிய மேம்பாலத்தால் சிக்கல்
கிடப்பில் திருக்கோஷ்டியூர் - சுண்ணாம்பிருப்பு விரிவாக்க ரோடு; தேசிய நெடுஞ்சாலையில் குறுகிய மேம்பாலத்தால் சிக்கல்
கிடப்பில் திருக்கோஷ்டியூர் - சுண்ணாம்பிருப்பு விரிவாக்க ரோடு; தேசிய நெடுஞ்சாலையில் குறுகிய மேம்பாலத்தால் சிக்கல்
ADDED : செப் 04, 2024 12:49 AM

திருக்கோஷ்டியூர் : ஆன்மிக தலங்களை இணைக்கும் திருக்கோஷ்டியூர்- சுண்ணாம்பிருப்பு ரோட்டை இருவழிச்சாலையாக மேம்படுத்த பொதுமக்கள் கோரியுள்ளனர்.
திருக்கோஷ்டியூரிலிருந்து குண்டேந்தல்பட்டி, சுண்ணாம்பிருப்பு வழியாக மதுரை ரோட்டிற்கு இணைப்பு ரோடு உள்ளது. 8 கி.மீ. துாரமுள்ள இந்த சாலையை திருக்கோஷ்டியூர்,சாமந்தன்பட்டி,சோலுடையான்பட்டி,பிராமணம்பட்டி,பூமலமந்தான்பட்டி,மேலையான்பட்டி கிராமத்தினர் பயன்படுத்துகின்றனர். மேலும் மேலுார் தும்பைப்பட்டியிலிருந்து அப்பகுதி மக்கள் இடையபட்டி வழியாக திருக்கோஷ்டியூர்,திருப்புத்துார் செல்லவும் பயன்படுத்துகின்றனர்.
மதுரை ரோடு வழியாக செல்லும் பக்தர்களும் பட்டமங்கலம், திருக்கோஷ்டியூர் உள்ளிட்ட ஆன்மிக தலங்களுக்கு செல்ல இந்த ரோட்டை பயன்படுத்துகின்றனர்.
கிடப்பில் விரிவாக்கம்:----------------------------------------
அண்மைக்காலமாக வாகனப் போக்குவரத்து இந்த ரோட்டில் அதிகரித்து வருகிறது.
இந்த ரோட்டை விரிவுபடுத்த நீண்ட காலமாக பொதுமக்கள் கோரியுள்ளனர். இந்த ரோட்டை 7 மீட்டர் அகலத்திற்கு விரிவுபடுத்த நெடுஞ்சாலைத்துறையினர் முன்னர்
திட்டமிட்ட நிலையில் தற்போது அந்த திட்டம் கிடப்பில் உள்ளது.
முன்னாள் ஊராட்சி தலைவர் மேலையான்பட்டி கருப்பையா கூறுகையில், ‛ இந்த ரோடு சுற்று வட்டாரக் கிராமத்தினருக்கு பயன்படுகிறது. தற்போது பல இடங்களில்
மண் அரிப்பு ஏற்பட்டுள்ளது. இங்கு கிராவல் போட்டு பராமரிக்க வேண்டும்.
இந்த ரோட்டில் கட்டப்பட்டுள்ள மேம்பாலம் குறுகியதாக உள்ளது.' என்றார்.
தேசிய நெடுஞ்சாலையில் குறுகிய பாலம்:
---------------------------------------------------------
இந்த ரோட்டில் மேலுார்-காரைக்குடி நான்கு வழிச்சாலை குறுக்கிடுமிடத்தில் தேசிய நெடுஞ்சாலைத்துறையினர் மேம்பாலம் கட்டியுள்ளனர்.
நெடுஞ்சாலைத்துறை ரோட்டின் விரிவாக்கத்திற்கேற்ப தொலை நோக்கில் மேம்பாலம் அகலமாகவோ,உயரமாகவோ கட்டாமல், குறுகியதாக கட்டியுள்ளனர்.
இந்த நெடுஞ்சாலைய விரிவாக்கம் செய்ய வசதியாக பல இடங்களில் அகலமாக பாலங்களை முன்னரே நெடுஞ்சாலைத்துறையினர் கட்டியுள்ள நிலையில், அதற்கு இணையாக இல்லாமல்
தேசிய நெடுஞ்சாலைத்துறையினர் குறுகிய அளவில் பாலத்தை கட்டியுள்ளனர்.
தற்போது பாலத்திற்கு கீழே பள்ளமாக உள்ளதால் கனரக வாகனங்கள் செல்ல முடிகிறது. இந்த ரோடு விரிவாக்கமோ, புதுப்பிக்கும் போது
உயரம் கூடினால் பாலத்தில் வாகனங்கள் செல்ல முடியாது.மேலும் இருவழிச்சாலை அளவில் பாலம் அகலமாக இல்லை. இதனால்
மேம்பாலத்தை விரிவுபடுத்துவது குறித்து தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தினர் ஆய்வு நடத்த கோரியுள்ளனர்.
நெடுஞ்சாலைத்துறையினர் கூறுகையில்,‛ திருக்கோஷ்டியூர்- பட்டமங்கலம், திருக்கோஷ்டியூர் -சுண்ணாம்பிருப்பு ஆகிய இரு ரோடுகளும் 5.5 மீ
அகலத்திற்கு விரிவாக்கம் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. அதற்கு தற்போது மதிப்பீடு தயாரித்து அனுப்பப்பட்டுள்ளது. நிதி அனுமதியான பின் இரு ரோடுகளும் விரிவுப்படுத்தப்படும்' என்றனர்.