/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
திருக்கோஷ்டியூர் மாசி தெப்பத்திருவிழா கொடியேற்றத்துடன் துவக்கம்: மார்ச் 14 ல் தெப்பம்
/
திருக்கோஷ்டியூர் மாசி தெப்பத்திருவிழா கொடியேற்றத்துடன் துவக்கம்: மார்ச் 14 ல் தெப்பம்
திருக்கோஷ்டியூர் மாசி தெப்பத்திருவிழா கொடியேற்றத்துடன் துவக்கம்: மார்ச் 14 ல் தெப்பம்
திருக்கோஷ்டியூர் மாசி தெப்பத்திருவிழா கொடியேற்றத்துடன் துவக்கம்: மார்ச் 14 ல் தெப்பம்
ADDED : மார் 06, 2025 01:29 AM

திருப்புத்துார்:சிவகங்கை மாவட்டம் திருக்கோஷ்டியூர் சவுமியநாராயணப் பெருமாள் கோயில் மாசி தெப்ப உற்ஸவம் நேற்று கொடியேற்றத்துடன் துவங்கியது. இரவில் பெருமாள் ஸ்ரீதேவி,பூதேவியருடன் தங்கப்பல்லக்கில் திருவீதி உலா நடந்தது.
இக்கோயிலில் 11 நாட்கள் நடைபெறும் மாசி தெப்ப உற்ஸவம் பிரசித்தி பெற்றது. நேற்று காலை 7:15 மணிக்கு உற்ஸவ பெருமாள்,ஸ்ரீதேவி,பூதேவியருடன் கருங்கல் மண்டபத்தில் கொடிமரம் அருகில் எழுந்தருளினர்.
தொடர்ந்து சக்கரத்தாழ்வார்,கொடிபடம் திருவீதி உலா துவங்கியது. காலை 10:26 மணிக்கு பட்டாச்சார்யர்களால் கொடியேற்றப்பட்டது.தொடர்ந்து கொடிமரத்திற்கும்,சுவாமிக்கும் பூஜை, அபிஷேகம் நடந்தது. கோயில் வளாகத்தில் வேண்டுதலுக்காக பெண்கள் தீபம் ஏற்றி பிரார்த்தித்தனர். மாலையில் நித்ய யாகசாலையில் பட்டாச்சார்யார்களால் நவகலச பூஜை,ேஹாமம் துவங்கியது. பெருமாள்,உபயநாச்சியார்,ஆச்சார்யார்க்கு காப்புக்கட்டி உற்ஸவம் துவங்கியது. இரவில் தங்கப்பல்லக்கில் பெருமாள், ஸ்ரீதேவி, பூதேவியர் எழுந்தருளி திருவீதி உலா நடந்தது.
மார்ச் 14 ல் தெப்பம்
இன்று முதல் தினசரி காலை சுவாமி புறப்பாடும், இரவில் வாகனங்களில் திருவீதி உலாவும் நடைபெறும். மார்ச் 13ல் வெண்ணெய்த்தாழி சேவையும், தெப்பம் முட்டுத் தள்ளுதலும் நடைபெறும்.
மார்ச் 14 மதியம் 12:16 மணி அளவில் பகல் தெப்பமும், இரவு 10:00 மணிக்கு தெப்பமும் நடைபெறும். மறுநாள் காலையில் தீர்த்தவாரி, இரவில் சுவாமி ஆஸ்தானம் சேருதலுடன் உற்ஸவம் நிறைவடையும்.
தெப்ப திருவிழாவில் விளக்கேற்றி வழிபாடு நடத்துவது இங்கு விசேஷம். விழா ஏற்பாட்டினை சிவகங்கை சமஸ்தான தேவஸ்தான நிர்வாகிகள் செய்கின்றனர்.