
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தேவகோட்டை: தேவகோட்டை அண்ணாநகர் கல்லாம்பிரம்பு காளியம்மன் முனீஸ்வரர் கோயில் சித்திரை உற்ஸவ விழா கணபதி ஹோமம் காப்பு கட்டுதலுடன் தொடங்கியது. ஒரு வாரம் காளியம்மன், முனீஸ்வரர், மற்றும் பரிவார சுவாமிகளுக்கு தினமும் சிறப்பு அபிஷேகம், அலங்கார பூஜைகள் நடந்தன.
பக்தர்கள் அக்னி சட்டி எடுத்து முக்கிய வீதிகளில் வலம் வந்து நேர்த்திக்கடன் செலுத்தினர். நேற்று முன்தினம் இரவு பெண்கள் மழை வளம் செழிக்க திருவிளக்கு பூஜை செய்து வழிபட்டனர்.