/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
சிவகங்கை -- தொண்டி ரோட்டில் கீரனுார் வளைவில் முட்செடிகள்: விபத்து அச்சத்தில் வாகன ஓட்டிகள்

ADDED : ஆக 25, 2024 10:54 PM

சிவகங்கை:
சிவகங்கை -- தொண்டி தேசிய நெடுஞ்சாலையில் கீரனுார் வளைவில் ரோட்டின் ஓரம் முட்புதர் மண்டி கிடப்பதால், எதிரே வரும் வாகனங்கள் தெரியாமல் விபத்து நேரிடும் அபாயம் நிலவுகிறது.
மதுரை -- சிவகங்கை -- தொண்டி தேசிய நெடுஞ்சாலையில் சுற்றுலா வாகனங்கள், தொண்டி துறைமுக மீன்பிடி இடங்களுக்கு செல்லும் சரக்கு வாகனங்கள் என தினமும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் செல்கின்றன. குறிப்பாக சிவகங்கை -- காளையார்கோவில் இடையே அதிகளவில் வாகனங்கள் இந்த ரோட்டில் செல்கின்றன. கொல்லங்குடி அருகே கீரனுார் விலக்கில் தேசிய நெடுஞ்சாலை ரோட்டில் பெரிய வளைவு உள்ளது.
இரு பக்கத்தில் இருந்தும் வேகமாக வரும் வாகனங்கள், எதிரே வரும் வாகன ஓட்டிகளுக்கு தெரியாத வகையில் பெரிய வளைவு ரோடாக உள்ளது.
இதற்காக அங்கு, ஒளிரும் சிவப்பு மின் விளக்கு இல்லை.
வேகமாக வரும் வாகனங்கள் வளைவில் திரும்பும் போது எதிரே வரும் வாகனங்கள் தெரியாத அளவிற்கு, ரோட்டின் இடது புற கால்வாயில் ரோட்டை மறைக்கும் வகையில் முட்புதர் மண்டிக் கிடக்கிறது.
தேசிய நெடுஞ்சாலை நிர்வாகம் கீரனுார் விலக்கு ரோட்டில் உள்ள பெரிய வளைவை மறைத்து வளர்ந்துள்ள முட்புதர்களை அகற்ற வேண்டும்.