/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
மதுகுடிக்க பணம் பறிப்பு; சிறுவர்கள் மூவர் கைது
/
மதுகுடிக்க பணம் பறிப்பு; சிறுவர்கள் மூவர் கைது
ADDED : பிப் 25, 2025 07:21 AM
மானாமதுரை : மானாமதுரையில் மது குடிப்பதற்காக டீ மாஸ்டரிடம் ரூ.500 மற்றும் அலைபேசியை பறித்துச் சென்ற 3 சிறுவர்களை கைது செய்த போலீசார், தப்பி ஓடிய மற்றொரு சிறுவனை தேடுகின்றனர்.
சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே உடையான்பட்டி நாடார் தெருவை சேர்ந்த சாமிகிருஷ்ணன் மகன் விஜயராஜ் 58. இவர் மானாமதுரையில் கடையில் டீ மாஸ்டராக வேலை பார்த்து வருகிறார். இவர் நேற்று இரவு வேலையை முடித்துவிட்டு ஊருக்கு செல்வதற்காக அங்கு ஸ்டேட் வங்கி அருகில் உள்ள வழியில் புது பஸ் ஸ்டாண்டிற்கு சென்று கொண்டிருந்தார்.
அப்பகுதியில் இருந்த 4 சிறுவர்கள் அவரை வழிமறித்து மது குடிப்பதற்காக பணம் கேட்டுள்ளனர். விஜயராஜ் பணம் கொடுக்காததால் சிறுவர்கள் அவரின் சட்டை பையில் இருந்த ரூ.500 மற்றும் அலைபேசியை பறித்து கொண்டு தப்பினர். இதுதொடர்பாக மானாமதுரை கிருஷ்ணராஜபுரம் காலனி பகுதியைச் சேர்ந்த 15 வயது சிறுவன், 17 வயது சிறுவர்கள் இருவர் என மூவரை கைது செய்த போலீசார் மற்றொரு 17 வயது சிறுவனை தேடிவருகின்றனர்.