/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
பெயருடன் பிறப்பு சான்று பெற 2024 டிச., வரை கால அவகாசம்
/
பெயருடன் பிறப்பு சான்று பெற 2024 டிச., வரை கால அவகாசம்
பெயருடன் பிறப்பு சான்று பெற 2024 டிச., வரை கால அவகாசம்
பெயருடன் பிறப்பு சான்று பெற 2024 டிச., வரை கால அவகாசம்
ADDED : ஏப் 19, 2024 05:15 AM
சிவகங்கை: பிறந்த 15 ஆண்டு வரை பிறப்பு சான்றில் பெயர் இடம்பெறாதவர்கள் பெயருடன் சான்று பெற 2024 டிச., வரை அவகாசம் அளிக்கப்பட்டுள்ளதுஎன கலெக்டர் ஆஷா அஜித் தெரிவித்தார்.
அவர் கூறியதாவது:
பெயருடன் கூடிய பிறப்பு சான்று அவசியம். இக்கால கட்டத்தில் பள்ளி சேர்க்கை, ரேஷன் கார்டு, வாக்காளர் அட்டையில் பெயர் சேர்த்தல், டிரைவிங் லைசென்ஸ், பாஸ்போர்ட், விசா மற்றும் அயல்நாடுகளில் குடியுரிமை பெற பெயருடன் கூடிய பிறப்பு சான்று மிக அவசியம்.
குழந்தை பிறந்த ஒரு ஆண்டுக்குள் கட்டணமின்றி குழந்தை பெயரை பிறப்பு பதிவேட்டில் பதிவு செய்த தேதியில் இருந்து ஒரு ஆண்டிற்கு மேல் ஆனால், காலதாமதகட்டணம் ரூ.200 செலுத்தி குழந்தையின் பெயரை பதிவு செய்து கொள்ளலாம்.
குழந்தை பிறந்து பதிவு செய்த தேதியில் இருந்து 15 ஆண்டிற்குள் மட்டுமே பெயர் பதிவு செய்யலாம்.
2000 ஜன.,1க்கு முன் பிறந்த குழந்தைகள் பெயரை பதிவு செய்து 15 ஆண்டு முடிந்தவர்களுக்கு குழந்தையின் பெயருடன்பிறப்பு சான்று பதிவு செய்ய 2024 டிச., வரை காலஅவகாசம் வழங்கப்பட்டுள்ளது. இதற்கு பின் பெயருடன் பிறப்பு சான்று பெற முடியாது.
பெயருடன் பிறப்பு சான்று பெற விரும்புவோர் தாசில்தார் அலுவலகத்தில் உரிய விண்ணப்பத்தை சான்றுடன், காலதாமத கட்டணம் ரூ.200 செலுத்தி, பிறப்பு சான்று நகல் ஒன்றுக்கு ரூ.200 செலுத்தி, பெயருடன் கூடிய பிறப்பு சான்றுகள் பெறலாம், என்றார்.

