/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
தொடர் மழையால் நிரம்பும் நீர் நிலைகள் திருப்புத்துார் விவசாயிகள் உற்சாகம்
/
தொடர் மழையால் நிரம்பும் நீர் நிலைகள் திருப்புத்துார் விவசாயிகள் உற்சாகம்
தொடர் மழையால் நிரம்பும் நீர் நிலைகள் திருப்புத்துார் விவசாயிகள் உற்சாகம்
தொடர் மழையால் நிரம்பும் நீர் நிலைகள் திருப்புத்துார் விவசாயிகள் உற்சாகம்
ADDED : ஆக 23, 2024 04:10 AM

திருப்புத்துார்: திருப்புத்துாரில் இந்த மாதம் பெய்த தொடர் மழையால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்து விவசாயப் பணிகளை துவக்க உள்ளனர்.
திருப்புத்துரில் இந்த மாத துவக்கம் முதல் தொடர்ந்து மழை பெய்கிறது. கடந்த மூன்று நாட்களில் தொடர் கன மழையால் விவசாயிகள் மகிழ்ச்சியில் உள்ளனர்.
10 நாட்களுக்கும் மேலாக பெய்த மழையில் 29.6; 8, 3.5, 29.4, 4.4, 44.5, 52.8, 72.20 மி.மீ என்ற அளவுகளில் பெய்தது. இதனால் சுற்று வட்டார கிராமங்களில் வரத்துக் கால்வாய்களில் நீர் பெருகி கண்மாய்களில் ஒரு மாதத்திற்கு தேவையான தண்ணீர் நிரம்பியுள்ளது.
பொதுப் பணித்துறையினர் கூறுகையில், 'பொ.ப.து. கண்மாய்களில் 118 ல் 40 கண்மாய்களில் 30 சதவீதம் முதல் 50 சதவீதம் தண்ணீர் உள்ளது.
பாலாற்றில் காரையூர், திருக்களாப்பட்டி கண்மாயில் 50 சதவீதம் நீர் நிரம்பியுள்ளது. மணிமுத்தாறு பகுதி கண்மாய்களில் வடமாவளி, திருக்கோஷ்டியூர் கண்மாய்களில் குறைந்த அளவிலான நீரே உள்ளது.
விருசுழியாற்று படுகை கண்மாய்களிலும் சில கண்மாய்களில் 50 சதவீதம் நீர் நிரம்பியுள்ளது.
தற்போது ஆகஸ்டில் வழக்கத்திற்கு அதிகமாக 150 மி.மீ. மழை பெய்துள்ளது. அடுத்த மழையில் ஆறுகளில் நீர்வரத்து துவங்கும் போது கண்மாய் முழு கொள்ளளவை எட்டும்' என்றனர்.
இந்நிலையில் கிராமத்தினர் கண்மாய் மடைகளுக்கு பூஜைகள் நடத்தி பாசனத்திற்கு தயாராகி வருகின்றனர். விரைவில் நெல் சாகுபடிக்கான நாற்றங்கால்களில் விதைகள் பாவ தயாராகி வருகின்றனர். கடந்த ஆண்டு போதிய மழை இல்லாமல் நெல்சாகுபடி வெகுவாக குறைந்தது. இந்தாண்டு கடந்த ஆண்டை விட அதிக நெல் சாகுபடியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.