/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
திருப்புத்துாரில் செப்.15ல் திருவிளக்கு பூஜை
/
திருப்புத்துாரில் செப்.15ல் திருவிளக்கு பூஜை
ADDED : செப் 03, 2024 05:45 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருப்புத்துார் : திருப்புத்துார் நின்ற நாராயணப்பெருமாள் கோயிலில் ஆவணி ஞாயிறு உத்ஸவத்தை முன்னிட்டு செப்.15ல் திருவிளக்கு பூஜை நடைபெறுகிறது.
இக்கோயிலில் ஆவணி ஞாயிறு உத்ஸவம் கடந்த ஆக.18 ல் துவங்கியது. ஆவணி ஞாயிறுகளில் காலை 10:00 மணிக்கு மூலவர் மகாலெட்சுமிக்கு திருமஞ்சனமும், தீபாராதனையும் நடைபெற்று வருகிறது. செப்.15 கடைசி ஆவணி ஞாயிறில் மகாலெட்சுமிக்கு காலையில் அபிேஷகமும், மாலையில் திருவிளக்கு பூஜையும் நடைபெற உள்ளது.
ஏற்பாட்டினை பரம்பரை அறங்காவலர்கள், விழாக்குழுவினர் செய்கின்றனர்.