/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
டி.என்.பி.எஸ்.சி., குரூப் 2 தேர்வு; 3470 பேர் ஆப்சென்ட்
/
டி.என்.பி.எஸ்.சி., குரூப் 2 தேர்வு; 3470 பேர் ஆப்சென்ட்
டி.என்.பி.எஸ்.சி., குரூப் 2 தேர்வு; 3470 பேர் ஆப்சென்ட்
டி.என்.பி.எஸ்.சி., குரூப் 2 தேர்வு; 3470 பேர் ஆப்சென்ட்
ADDED : செப் 14, 2024 11:59 PM

சிவகங்கை : டி.என்.பி.எஸ்.சி., குரூப் 2 தேர்வினை 43 மையங்களில் 9730 பேர் தேர்வு எழுதினர். விண்ணப்பித்தவர்களில் 3470 பேர் ஆப்சென்ட் ஆயினர்.
சிவகங்கை மாவட்டத்தில் டி.என்.பி.எஸ்.சி., குரூப் 2 தேர்வுக்கு மொத்தம் 13 ஆயிரத்து 200 பேர் விண்ணப்பித்திருந்தனர். இவர்களுக்காக மாவட்டத்தில் 43 தேர்வு மையங்களில் தேர்வு எழுத ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
சிவகங்கையில் 22 தேர்வு மையங்களில் 4 ஆயிரத்து 783 பேர் தேர்வு எழுதினர் 1558 பேர் ஆப்சென்ட். காரைக்குடியில் 16 மையங்களில் 3 ஆயிரத்து 760 பேர் தேர்வு எழுதினர் 1451 பேர் ஆப்சென்ட், தேவகோட்டையில் 5 மையங்களில் 1187 பேர் தேர்வு எழுதினர் 461 பேர் ஆப்சென்ட். மொத்தம் விண்ணப்பித்த 13,200 பேரில் 74 சதவீதத்தினர் தேர்வு எழுதினர். கலெக்டர் ஆஷா அஜித் சிவகங்கை மன்னர் துரைசிங்கம் அரசு கலைக் கல்லுாரி, அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி ஆகிய தேர்வு மையங்களில் ஆய்வு செய்தார்.