ADDED : ஆக 20, 2024 07:26 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
காரைக்குடி : காரைக்குடி சுப்பிரமணியபுரத்தில் உள்ள ஸ்ரீ ராமநவமி மஹோத்ஸவ சபாவில் கோகுலாஷ்டமி மகோத்ஸவம் நாளை முதல் செப்.1 வரை நடைபெறுகிறது.
இதில் உபன்யாசம், திவ்யா நாம பஜனை, ஆஞ்சநேய உத்ஸவம் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெறுகிறது. நாளை முதல் ஆக.30 வரை கலைமாமணி காஞ்சி காமகோடி பீட ஆஸ்தான வித்வான் திருச்சி கல்யாணராமனின் வில்லிபாரதம் தொடர் சொற்பொழிவு நடைபெறுகிறது.
தினமும் மாலை 6:30 மணிக்கு அர்ச்சுனன் தீர்த்த யாத்திரை, திரௌபதி மானம் காத்தல், நள சரித்திரம், அர்ச்சுனன் தவம், நச்சுப் பொய்கை, கோகுலாஷ்டமி நச்சுக் பொய்கை, சகாதேவனும் கண்ணனும், குந்தியும் கண்ணனும், கீதையில் கண்ணன், கர்ணன் மோட்சம் தர்மர் பட்டாபிஷேகம் உள்ளிட்ட தொடர் சொற்பொழிவுகள் நடைபெறுகிறது.

