/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
கிராமங்களுக்கு டவுன் பஸ்கள் நிறுத்தம் தவிக்கும் கூலித்தொழிலாளர்கள்
/
கிராமங்களுக்கு டவுன் பஸ்கள் நிறுத்தம் தவிக்கும் கூலித்தொழிலாளர்கள்
கிராமங்களுக்கு டவுன் பஸ்கள் நிறுத்தம் தவிக்கும் கூலித்தொழிலாளர்கள்
கிராமங்களுக்கு டவுன் பஸ்கள் நிறுத்தம் தவிக்கும் கூலித்தொழிலாளர்கள்
ADDED : மார் 22, 2024 04:46 AM
திருப்புவனம்: திருப்புவனத்தைச் சுற்றியுள்ள கிராமங்களுக்கு செல்லும் டவுன் பஸ்கள் இரவு நேரத்தில் திடீரென நிறுத்தி விடுவதால் கூலி தொழிலாளர்கள் சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர்.
திருப்புவனம் தாலுகாவில் 45 ஊராட்சிகளைச் சேர்ந்த 173 கிராமங்கள் உள்ளன. திருப்புவனம் பகுதியில் உள்ள கிராமமக்கள் பலரும் மதுரையில் உள்ள கடைகளில் பணிபுரிகின்றனர்.
இதுதவிர சிறு விவசாயிகள் பலரும் காய்கறிகளை மதுரையில் விற்பனை செய்து வருகின்றனர்.முழுக்க முழுக்க இவர்கள் மதுரை சென்று வர அரசு டவுன் பஸ்களை நம்பியே உள்ளனர்.
திருப்புவனம் கிளை பணிமனை மூலம் 44 டவுன் பஸ்கள் சுற்றுவட்டார கிராமங்களுக்கு மதுரை மத்திய பேருந்து நிலையத்தில் இருந்து இயக்கப்படுகின்றன. சமீப காலமாக இரவு நேரங்களில் கண்ணாரிருப்பு, மணல்மேடு, ஏனாதி, தேளி உள்ளிட்ட கிராமங்களுக்கு செல்லும் டவுன் பஸ்கள் நிறுத்தப்படுகின்றன.
இரவு நேரங்களில் கடைசி டவுன் பஸ்சை நம்பி வரும் தொழிலாளர்கள் பலரும் கிராமத்திற்கு பஸ்கள் செல்லாததால் திருப்புவனத்தில் நீண்ட நேரம் காத்திருந்து சரக்கு வேன் உள்ளிட்டவற்றில் பயணம் செய்ய வேண்டியுள்ளது.
பஸ்கள் இல்லாததால் டூவீலர்களில் செல்பவர்களை சிலர் மறித்து பணத்தை பறித்து வருகிறது. மடப்புரம், ஏனாதி ரோட்டில் அடிக்கடி வழிப்பறி சம்பவங்கள் நடந்து வருவதால் கிராமமக்கள் பலரும் இரவு நேரத்தில் கூட்டமாகவே சென்று வர வேண்டியுள்ளது.
வழிப்பறியில் பணம் குறைவாக இருப்பதால் போலீசில் புகார் செய்தாலும் நடவடிக்கை எடுப்பதில்லை என கிராம மக்கள் புலம்புகின்றனர். மடப்புரம், ஏனாதி ரோட்டின் ஒரு பகுதி திருப்புவனம் காவல் நிலையத்திலும் மறு பகுதி பூவந்தி காவல் நிலைய கட்டுப்பாட்டில் வருவதாலும் போலீசார் எந்த வித நடவடிக்கையும் எடுப்பதில்லை.
எனவே மாவட்ட நிர்வாகம் கிராமங்களுக்கு பஸ்களை இயக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும், அதே போல காவல் துறையினரும் வழிப்பறி சம்பவங்களை தடுக்க வேண்டும் என கிராமமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

