/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
கொளுத்தும் வெயிலில் வெடிக்கும் தேங்காய் தவிக்கும் வியாபாரிகள்
/
கொளுத்தும் வெயிலில் வெடிக்கும் தேங்காய் தவிக்கும் வியாபாரிகள்
கொளுத்தும் வெயிலில் வெடிக்கும் தேங்காய் தவிக்கும் வியாபாரிகள்
கொளுத்தும் வெயிலில் வெடிக்கும் தேங்காய் தவிக்கும் வியாபாரிகள்
ADDED : செப் 12, 2024 04:53 AM

திருப்புவனம்: திருப்புவனத்தில் நாளுக்கு நாள் அதிகரிக்கும் வெயிலின் தாக்கத்தால் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ள தேங்காய்களில் வெடிப்பு ஏற்படுவதால் நஷ்டம் ஏற்படுவதாக வியாபாரிகள் புலம்புகின்றனர்.
திருப்புவனம் தாலுகாவில் பிரதான தொழில் தென்னை விவசாயம். வைகை ஆற்றை ஒட்டியுள்ள பகுதி என்பதால் இருபுறமும் தென்னந்தோப்பு உள்ளன.ஆற்றில் நீர்வரத்து இல்லாவிட்டால் கூட பம்ப்செட் மூலம் தென்னை மரங்களை விவசாயிகள் பாதுகாத்து வருகின்றனர்.
திருப்புவனம் புஷ்பவனேஷ்வரர் கோயில், மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயில், பெருமாள் கோயில், மாரநாடு கருப்பசாமி கோயில்கள் உள்ளன. இவற்றிற்காகவும் சமையல் பயன்பாட்டிற்காகவும் ரோட்டை ஒட்டி தேங்காய், பழங்கள் விற்பனை செய்யப்படுகின்றன. பெரும்பாலான வியாபாரிகள் பொதுமக்கள் பார்வைக்காக கடை முன் தேங்காய்களை ரகம் வாரியாக அடுக்கி வைப்பது வழக்கம்.
கடந்த சில நாட்களாக திருப்புவனம் பகுதியில் வெயிலின் தாக்கம் அதிகரித்து வருகிறது. பகலில் வீட்டை விட்டு வெளியில் வரவே முடியவில்லை. பகல் முழுவதும் கடும் வெயில் மாலை நேரங்களில் காற்று காரணமாக தேங்காய்களில் வெடிப்பு ஏற்பட்டு வருகின்றன. வெடிப்பு ஏற்பட்ட தேங்காய்களை கோயிலுக்கு வாங்கிச் செல்ல மாட்டார்கள், வீடுகளிலும் வெடிப்பு ஏற்பட்ட தேங்காய்களை அன்றே பயன்படுத்த வேண்டும், இல்லாவிட்டால் அழுகி விடும் என்பதால் வீடுகளுக்கும் வாங்குவதில்லை. இதனால் நஷ்டம் ஏற்பட்டு வருவதாக வியாபாரிகள் புலம்புகின்றனர்.
வியாபாரிகள் கூறுகையில்: உள்ளூர் தேங்காய்களுடன் பொள்ளாச்சி உள்ளிட்ட பகுதிகளில் இருந்தும் தேங்காய்கள் வாங்கி வந்து விற்பனை செய்கிறோம். தற்போது முகூர்த்த நாட்கள் என்பதால் விற்பனை அதிகமாக இருக்கும். மழை காலமான செப்டம்பரில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால் தேங்காய்களில் வெடிப்பு ஏற்பட்டு விடுகிறது.
30 ரூபாய்க்கு விற்பனை செய்ய வேண்டிய தேங்காய்களில் வெடிப்பு இருப்பதால் 10 முதல் 15 ரூபாய்க்கே விற்பனை செய்ய வேண்டியுள்ளது. தேங்காய்கள் மேல் ஈர சாக்கு அட்டை பெட்டி ஆகியவற்றை வைத்து மூடி பாதுகாக்க வேண்டியுள்ளது, என்றனர்.

