/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
ஆவணி முகூர்த்த நாட்கள் சந்தையில் குவிந்த வியாபாரிகள்
/
ஆவணி முகூர்த்த நாட்கள் சந்தையில் குவிந்த வியாபாரிகள்
ஆவணி முகூர்த்த நாட்கள் சந்தையில் குவிந்த வியாபாரிகள்
ஆவணி முகூர்த்த நாட்கள் சந்தையில் குவிந்த வியாபாரிகள்
ADDED : ஆக 21, 2024 07:22 AM

திருப்புவனம் : திருப்புவனம் கால்நடை சந்தையில் தொடர் முகூர்த்த நாட்களை முன்னிட்டு விற்பனைக்காக ஏராளமான ஆடுகள் கொண்டு வரப்பட்டிருந்தன.
மாவட்டத்தில் திருப்புவனம் வட்டாரத்தில் தான் அதிகளவு கால்நடைகள் வளர்க்கப்படுகின்றன. பெத்தானேந்தல், அல்லிநகரம், கீழடி, கொந்தகை, பழையனுார் உள்ளிட்ட பகுதிகளில் கறவை மாடு, ஆடு, கோழி உள்ளிட்டவைகள் அதிகளவில் வளர்க்கப்படுகின்றன. காரைக்குடி ஆவின் நிறுவனத்திற்கு தினசரி திருப்புவனம் பகுதியில் இருந்து அதிகபட்சமாக 3 ஆயிரம் லிட்டர் பால் விற்பனைக்கு அனுப்பப்படுகிறது.
திருப்புவனத்தில் வாரம்தோறும் செவ்வாய்க்கிழமை காலை ஆறு மணி முதல் பத்துமணி வரை கால்நடை சந்தை நடைபெறும், மதுரை, தேனி, திண்டுக்கல், கேரளா உள்ளிட்ட பகுதிகளில் இருந்து ஏராளமான வியாபாரிகள் ஆடு, கோழி வாங்க வருவார்கள்.
இதுதவிர விவசாயிகள் வீடுகளில் வளர்ப்பதற்காகவும், முகூர்த்த நாட்களில் விருந்திற்கு அசைவம் சமைப்பதற்காகவும் ஆடு, கோழி வாங்க வருகை தருவார்கள், இந்த மாதம் 22, 23,30 செப்டம்பரில் 5,6,8, 15, 16 என அடுத்தடுத்து முகூர்த்த நாட்கள் வருவதால் நேற்றைய சந்தையில் ஆடுகள் வாங்க ஏராளமானவர்கள் குவிந்தனர். 10 கிலோ எடை கொண்ட ஆடு ஆறாயிரம் ரூபாயில் இருந்து 8 ஆயிரம் ரூபாயாக விலை உயர்ந்தது. ஒன்றரை கிலோ எடை கொண்ட நாட்டுகோழி 350 ரூபாயாக விற்பனை செய்யப்பட்டது. செம்மறியாடுகள் விலை வழக்கம் போல ஆறாயிரம், ஏழாயிரம் என விற்பனை செய்யப்பட்டது.

