/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
மானாமதுரையில் பாரம்பரிய மஞ்சள் நீராட்டு விழா
/
மானாமதுரையில் பாரம்பரிய மஞ்சள் நீராட்டு விழா
ADDED : ஆக 19, 2024 12:36 AM
மானாமதுரை : மானாமதுரை கண்ணார் தெரு முத்துமாரியம்மன் கோயிலில் பாரம்பரியம் மாறாமல் மஞ்சள் நீராட்டு விழா நடைபெற்றது. முறைப்பெண்கள், மாமன்கள் மீது மஞ்சள் நீரை ஊற்றி மகிழ்ந்தனர்.
இக்கோயிலில் ஆடி முளைப்பாரி விழா ஆக., 9 ல் காப்பு கட்டுடன் துவங்கியது. ஆக., 16 அன்று பக்தர்கள் பால்குடம், அழகு குத்தியவாறே பூக்குழி இறங்கி நேர்த்தி செலுத்தினர். கோயில் முன் பொங்கல் வைத்து வழிபட்டனர். பெண்கள் முளைப்பாரி எடுத்து ஊர்வலமாக வந்து அலங்கார குளத்தில் கரைத்தனர். நேற்று காலை அம்மனுக்கு மஞ்சள் நீராட்டு விழா நடந்தது. இதையடுத்து கண்ணார் தெரு மக்கள் முறை பெண்கள் மீது மாமன்களும், மாமன்கள் மீது முறைப்பெண்களும் மஞ்சள் நீர் ஊற்றி விளையாடினர். விழாக்குழுவினர் ஏற்பாட்டை செய்திருந்தனர்.