/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
கொல்லங்குடியில் ஆர்ச் முன் பஸ்களை நிறுத்துவதால் போக்குவரத்து நெரிசல்

ADDED : பிப் 27, 2025 01:02 AM
சிவகங்கை; கொல்லங்குடியில் ரோட்டை ஆக்கிரமித்துள்ள கடைகளை அகற்றுவதோடு, ஆர்ச் முன் பஸ்களை நிறுத்துவதால் நெரிசல் ஏற்படுவதை தவிர்க்க பஸ் ஸ்டாப்பில் மட்டுமே நிறுத்தி செல்ல வேண்டும் என வலியுறுத்துகின்றனர்.
மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற அம்மன் கோயிலில் முக்கியமானது கொல்லங்குடி அருகேயுள்ள அரியாக்குறிச்சி வெட்டுடையார் காளிகோயில். இக்கோயிலுக்கு வெள்ளி, செவ்வாய் மற்றும் பிற நாட்களில் ஏராளமான பக்தர்கள் வருகை தருகின்றனர். மதுரை - தொண்டி ரோட்டில் உள்ள கொல்லங்குடிக்கு பஸ்களில் வரும் பக்தர்கள் கொல்லங்குடி ஆர்ச் முன் இறங்கி, அங்கிருந்து 3 கி.மீ., துாரமுள்ள அரியாக்குறிச்சி வெட்டுடையார் காளி கோயிலுக்கு செல்கின்றனர்.
மதுரை - தொண்டி தேசிய நெடுஞ்சாலையில் கொல்லங்குடி இருந்த போதும் ஆர்ச் முன் குறுகிய ரோடாக இருப்பதால், அங்கு ஆக்கிரமிப்பு கடைகளால் வாகனங்கள் சென்று வருவதில் சிரமம் ஏற்படுகிறது.
இந்த நிலையில் ஆர்ச் முன் பஸ்களை நிறுத்தி பயணிகளை ஏற்றி, இறக்குகின்றனர். இதற்கென உள்ள பஸ் ஸ்டாப்பில் பஸ்களை நிறுத்த வேண்டும் என கொல்லங்குடி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.