/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
குறுகிய சாலையால் போக்குவரத்து நெரிசல்
/
குறுகிய சாலையால் போக்குவரத்து நெரிசல்
ADDED : மார் 08, 2025 05:35 AM

சிங்கம்புணரி : சிங்கம்புணரியில் குறுகிய சாலையால் தினமும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு பள்ளி கல்லுாரிக்கு செல்பவர்கள் அவதிப்படுகின்றனர்.
இப்பேரூராட்சியில் மேலுார் செல்லும் ரோடு, கிளை நுாலகத்தில் இருந்து சந்திவீரன் கூடம் வரையுள்ள 50 மீட்டர் துாரம் குறுகலாக உள்ளது.மேலும் சில மின்கம்பங்கள் போக்குவரத்துக்கு இடையூறாக உள்ளது. இதனால் காலை, மாலை நேரங்களில் இச்சாலையில் தினமும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.
ஒரு வாகனம் மட்டுமே செல்லும் வகையில் சாலை இருப்பதால் மற்ற வாகனங்கள் காத்திருந்து செல்ல வேண்டியுள்ளது.
நெரிசல் ஏற்பட்டால் வேறு எந்த மாற்று வழியும் இல்லாத நிலையில் பள்ளி, கல்லூரி வாகனங்கள், பஸ்கள் நீண்ட நேரம் காத்திருந்து செல்ல வேண்டியுள்ளது.
இதனால் அனைத்து தரப்பினரும் கடும் அவதிக்கு ஆளாகின்றனர்.
இச்சாலையில் இடையூறாக உள்ள மின் கம்பங்களை வேறு இடத்திற்கு மாற்றுவதுடன், சாலையை அகலப்படுத்த நெடுஞ்சாலைத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்.