/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
ஓட்டு எண்ணும் அலுவலர்களுக்கு சிவகங்கையில் பயிற்சி வகுப்பு
/
ஓட்டு எண்ணும் அலுவலர்களுக்கு சிவகங்கையில் பயிற்சி வகுப்பு
ஓட்டு எண்ணும் அலுவலர்களுக்கு சிவகங்கையில் பயிற்சி வகுப்பு
ஓட்டு எண்ணும் அலுவலர்களுக்கு சிவகங்கையில் பயிற்சி வகுப்பு
ADDED : மே 25, 2024 05:34 AM

சிவகங்கை : சிவகங்கை லோக்சபா தொகுதி ஓட்டு எண்ணும் பணியில் ஈடுபடும் மேற்பார்வையாளர், உதவியாளர்களுக்கு கலெக்டர் அலுவலகத்தில் பயிற்சி நடந்தது.
சிவகங்கை லோக்சபா தொகுதிக்கு உட்பட்ட சிவகங்கை, காரைக்குடி, மானாமதுரை (தனி), திருப்புத்துார், ஆலங்குடி, திருமயம் ஆகிய 6 சட்டசபை தொகுதிகளுக்கான ஓட்டுப்பதிவு ஏப்., 19ல் நடந்தது.
இதில், 16 லட்சத்து 33 ஆயிரத்து 857 வாக்காளர்களில், 10 லட்சத்து 49 ஆயிரத்து 675 வாக்காளர்கள் ஓட்டளித்தனர். 1,857 ஓட்டுச்சாவடிகளில் பயன்படுத்திய ஓட்டுப்பதிவு, கட்டுப்பாடு மற்றும் ஓட்டு உறுதி தன்மை இயந்திரங்கள் காரைக்குடி அழகப்பா அரசு பொறியியல், பாலிடெக்னிக் கல்லுாரிகளில் பாதுகாப்பு அறைகளில் வைத்துள்ளனர். இங்கு ஜூன் 4 ம் தேதி காலை ஓட்டு எண்ணும் பணி துவங்குகிறது.
தொகுதிக்கு 14 மேஜை வீதம் 6 சட்டசபை தொகுதிக்கு 84 மேஜைகளில் ஓட்டு எண்ணும் பணி நடக்கும். ஒவ்வொரு மேஜைக்கும் ஓட்டு எண்ணும் மேற்பார்வையாளர், உதவியாளர், நுண் பார்வையாளர் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.
இதில், ஓட்டு எண்ணும் மேற்பார்வையாளர், உதவியாளர்கள், இது தவிர தபால் ஓட்டுக்கள் எண்ண லோக்சபா தொகுதிக்கு 6 மேஜைகள் அமைக்கப்பட்டு, அதில் தலா 5 பேர் வீதம் 30 பேர் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.
ஓட்டு எண்ணும் பணி குறித்த பயிற்சி வகுப்பு நேற்று கலெக்டர் ஆஷா அஜித் தலைமையில் நடந்தது.
மாவட்ட வருவாய் அலுவலர் மோகனச்சந்திரன் முன்னிலை வகித்தார். உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்கள் விஜயகுமார், சரவண பெருமாள், பால்துரை பங்கேற்றனர். தாசில்தார் தமிழரசன் ஓட்டு எண்ணும் மேற்பார்வையாளர், உதவியாளர்களுக்கு பயிற்சி அளித்தார்.

