ADDED : செப் 15, 2024 12:05 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருப்புத்துார்: திருப்புத்துார் வட்டார விவசாயிகளுக்கு அங்கக வேளாண்மை தொழில் நுட்பங்கள் குறித்து கர்நாடகாவில் பயிற்சி அளிக்கப்பட்டது.
அட்மா - விரிவாக்க சீரமைப்பு திட்டத்தின் கீழ் திருப்புத்துார் உள்ளிட்ட நான்கு வட்டாரங்களைச் சேர்ந்த 20 விவசாயிகள் கர்நாடக மாநிலத்திற்கு வேளாண் பயிற்சிக்கு சென்றனர். அங்கு அங்கக வேளாண்மை தொழில்நுட்பங்கள் குறித்த பயிற்சியை பெங்களூரு வேளாண் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனத்தில் பெற்றனர்.
இப்பயிற்சியில் இயற்கை உரத்தின் முக்கிய ஆதாரங்களான கால்நடை தொழுவத்தின் கழிவுகள், கோழிப்பண்ணை, ஆடு, மாடு ஆகியவற்றின் கழிவுகளின் பயன்கள் குறித்தும் பயிற்சி அளிக்கப்பட்டது. வட்டார தொழில்நுட்ப மேலாளர் சுதர்சன், உதவி தொழில்நுட்ப மேலாளர் சண்முகப்பாண்டி ஆகியோர் விவசாயிகளை ஒருங்கிணைத்தனர்.