/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
அரசனேந்தலில் டிரான்ஸ்பார்மர் பழுது
/
அரசனேந்தலில் டிரான்ஸ்பார்மர் பழுது
ADDED : செப் 09, 2024 05:39 AM
மானாமதுரை ; மானாமதுரை அருகே அரசனேந்தலில் டிரான்ஸ்பார்மர் பழுதால் மக்கள் குடிநீர் கிடைக்காமல் சிரமப்படுகின்றனர்.
கீழப்பசலை ஊராட்சிக்குட்பட்ட அரசனேந்தலில் உள்ள டிரான்ஸ்பார்மர் கடந்த சில நாட்களுக்கு முன்பு பழுதடைந்ததை தொடர்ந்து அப்பகுதியில் குறைந்தழுத்த மற்றும் உயரழுத்த மின்சாரம் மாறி,மாறி வருவதால் மின்சாதன பொருட்கள் சேதமடைந்து வருவதாக கிராம மக்கள் கூறுகின்றனர்.
மின் மோட்டார் இயங்காத காரணத்தினால் குடிநீரும் கிடைக்காமல் கிராம மக்கள் ஆற்றில் ஊற்று தோண்டி தண்ணீர் எடுத்து வர வேண்டிய நிலை உள்ளதாக தெரிவிக்கின்றனர். டிரான்ஸ்பார்மர் சேதமடைந்தது குறித்து மின்வாரிய அதிகாரிகளிடம் புகார் தெரிவித்தும் இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என மக்கள் கூறுகின்றனர்.