/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
வேதியரேந்தலில் டிரான்ஸ்பார்மர் பழுது
/
வேதியரேந்தலில் டிரான்ஸ்பார்மர் பழுது
ADDED : ஆக 29, 2024 05:16 AM
மானாமதுரை: மானாமதுரை அருகே வேதியரேந்தல் கிராமத்தில் பழுதடைந்த டிரான்ஸ்பார்மருக்கு பதிலாக மாற்றப்பட்ட மற்றொரு டிரான்ஸ்பார்மரும் மீண்டும் பழுதடைந்ததால் கிராம மக்கள் சிரமப்படுகின்றனர்.
மானாமதுரை அருகே கீழப்பசலை ஊராட்சிக்குட்பட்ட வேதியரேந்தல் கிராமத்தில் உள்ள பள்ளி மற்றும் குடியிருப்பு அருகில் உள்ள டிரான்ஸ்பார்மர் பழுதடைந்தது குறித்து கிராம மக்கள் புகார் கூறியதால் மற்றொரு டிரான்ஸ்பார்மர் மாற்றப்பட்டது.மாற்றப்பட்ட சில நாட்களிலேயே அந்த டிரான்ஸ்பார்மரும் பழுதடைந்தது.இதனால் கிராம மக்கள் மின்சாரம் கிடைக்காமல் சிரமப்படுகின்றனர்.
இது குறித்து ஊராட்சி வார்டு கவுன்சிலர் நாகராஜன் கூறியதாவது: ஊரக மின்வாரிய அதிகாரிகளிடம் பலமுறை தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. உரிய பதில் அளிக்காமல் அலட்சியம் காட்டி வருகின்றனர்.மாவட்டம் நிர்வாகம் மற்றும் மின்வாரிய அதிகாரிகள் பழுதடைந்த டிரான்ஸ்பார்மரை மாற்ற நடவடிக்கையை எடுக்க வேண்டும் என்றார்.

