/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
திருச்சி - ராமநாதபுரம் பயணிகள் ரயில் மானாமதுரையிலிருந்து இயக்கம்
/
திருச்சி - ராமநாதபுரம் பயணிகள் ரயில் மானாமதுரையிலிருந்து இயக்கம்
திருச்சி - ராமநாதபுரம் பயணிகள் ரயில் மானாமதுரையிலிருந்து இயக்கம்
திருச்சி - ராமநாதபுரம் பயணிகள் ரயில் மானாமதுரையிலிருந்து இயக்கம்
ADDED : ஜூலை 05, 2024 04:42 AM
மானாமதுரை: திருச்சி,ராமநாதபுரம் வரை இயக்கப்படும் பயணிகள் ரயில் வரும் ஜூலை 31ம் தேதி வரை ரயில் பாதை பராமரிப்பு காரணமாக மானாமதுரை,ராமநாதபுரம் இடையே ரத்து செய்யப்பட்டுள்ளது.
திருச்சியிலிருந்து தினம்தோறும் ராமேஸ்வரத்திற்கு பயணிகள் ரயில் காலை 7:05 மணிக்கு புறப்பட்டு மதியம் 12:25 மணிக்கு ராமேஸ்வரம் சென்றடைந்தது.
மறுமார்க்கத்தில் பிற்பகல் 2:05 மணிக்கு ராமேஸ்வரத்திலிருந்து புறப்பட்டு இரவு 8:10 மணிக்கு திருச்சியை சென்றடைந்தது. தற்போது பாம்பன் ரயில் பாலம் வேலை நடந்து வருவதால் இந்த ரயில் ராமநாதபுரம் வரை மட்டுமே இயக்கப்படுகிறது.
வாரத்தில் இரண்டு நாட்கள் மட்டுமே ராமநாதபுரத்திலிருந்து இந்த ரயில் புறப்பட்டு திருச்சி சென்று வந்தது. மற்ற நாட்கள் மானாமதுரையில் இருந்து திருச்சி புறப்பட்டு சென்றது.
தற்போது மானாமதுரையிலிருந்து ராமநாதபுரம் இடையே உள்ள ரயில்வே பாதையில் பராமரிப்பு பணி காரணமாக இந்த ரயில் மானாமதுரை,ராமநாதபுரம் இடையே வரும் ஜூலை 31 வரை ரத்து செய்யப்பட்டுள்ளதாக ரயில்வே நிர்வாகத்தினர் தெரிவித்துள்ளனர்.
இந்த ரயில் திருச்சியிலிருந்து மானாமதுரையுடன் நிறுத்தப்பட்டு மீண்டும் மாலை 4:30 மணிக்கு மானாமதுரையிலிருந்து கிளம்பி இரவு 8:10 மணிக்கு திருச்சியை சென்றடையும்.