/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
திருப்புத்துாரில் கலங்கலான குடிநீர் வழங்கல்; பொதுமக்கள் அச்சம்
/
திருப்புத்துாரில் கலங்கலான குடிநீர் வழங்கல்; பொதுமக்கள் அச்சம்
திருப்புத்துாரில் கலங்கலான குடிநீர் வழங்கல்; பொதுமக்கள் அச்சம்
திருப்புத்துாரில் கலங்கலான குடிநீர் வழங்கல்; பொதுமக்கள் அச்சம்
ADDED : ஆக 19, 2024 12:33 AM

திருப்புத்தூர் : திருப்புத்தூர் குடிநீர் விநியோகத்தில் மண் கலந்த நீர் வருவதால் பொதுமக்கள் நோய் பரவும் அச்சத்தில் உள்ளனர்.
திருப்புத்தூரில் காவிரிக்குடிநீர் திட்டம் மூலம் குடிநீர் விநியோகம் நடைபெறுகிறது. இரு நாட்களுக்கு ஒரு முறை காலையில் விநியோகிக்கப்படுகிறது. தற்போது காரைக்குடி ரோட்டில் நெடுஞ்சாலைத்துறை விரிவாக்கப்பணி, நகர் முழுவதும் குடிநீர் அபிவிருத்தித் திட்ட குழாய் பதிப்பு பணிகள் நடைபெறுகிறது. இதனால் ஆங்காங்கே குடிநீர் குழாய்கள் சேதமடைந்து குடிநீரில் மண் கலந்துவிடுகிறது. நேற்று சின்னதோப்பு தெருவில் வீடுகளுக்கு வழங்கப்பட்ட குடிநீர் மண் கலந்த நீராக வந்தது. இதனால், பொதுமக்களுக்கு காலரா உள்ளிட்ட நோய் பரவும் அச்சம் நிலவுகிறது. தரமான குடிநீர் வழங்க குடிநீர் வடிகால் வாரியம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.