/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
திருப்புவனம் அருகே கொலை வழக்கில் தேடப்பட்ட இருவர் கைது
/
திருப்புவனம் அருகே கொலை வழக்கில் தேடப்பட்ட இருவர் கைது
திருப்புவனம் அருகே கொலை வழக்கில் தேடப்பட்ட இருவர் கைது
திருப்புவனம் அருகே கொலை வழக்கில் தேடப்பட்ட இருவர் கைது
ADDED : ஜூலை 07, 2024 02:14 AM
திருப்புவனம்: திருப்புவனம் அருகே கீழவெள்ளூரில் இரண்டு ஆண்டுகளுக்கு முன் நடந்த கொலை வழக்கில் தொடர்புடைய இருவரை போலீசார் கைது செய்தனர்.
கீழவெள்ளூரில் கடந்த 27.5.2022ல் கத்தியால் குத்தி கொலை செய்து பெட்ரோல் ஊற்றி எரிக்கப்பட்ட நிலையில் ஆண் உடல் கண்டெடுக்கப்பட்டது. திருப்புவனம் போலீசார் விசாரித்து வந்தனர்.
இறந்தவர், கொலைக்கான காரணம், கொலை செய்தவர்கள் என எதுவும் தெரியவில்லை.
இந்நிலையில் தனிப்படை விசாரணையில் இறந்தவர் தேனி மாவட்டம் கம்பம் மேடு காலனியை சேர்ந்த அக்பர் அலி 45, என தெரிய வந்தது.
அக்பர் அலி தேனியில் இருந்து கஞ்சா வாங்கி வந்து மதுரை உள்ளிட்ட பகுதிகளில் விற்பனை செய்து வருபவர் என்றும் இது தொடர்பாக கைது செய்யப்பட்டு மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.
சிறையில் தேனி மாவட்டம் உத்தமபாளையம் அனீஸ் ரகுமான் 42, சென்னை எண்ணுார் அண்ணாமலை 45, ஆகியோருடன் தகராறு ஏற்பட்டது. சிறையில் இருந்து மூவரும் விடுதலை யான நிலையில் அக்பர் அலியை கொலை செய்ய மற்ற இருவரும் திட்டமிட்டு கீழவெள்ளூர் அழைத்து வந்து கொலை செய்து பெட்ரோல் ஊற்றி எரித்தது போலீஸ் விசாரணையில் தெரியவந்தது. கொலை வழக்கில் போலீசார் அனீஸ்ரகுமான், அண்ணாமலையை தேனி மாவட்டத்தில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு கைது செய்தனர்.