/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
பள்ளத்தில் கார் கவிழ்ந்து இருவர் காயம்
/
பள்ளத்தில் கார் கவிழ்ந்து இருவர் காயம்
ADDED : ஏப் 27, 2024 04:23 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தேவகோட்டை: தர்மபுரி மாவட்டம் அரூர் பகுதியைச் சேர்ந்தவர் செல்வம் 57, இவரது மகன் தினேஷ் 24, இவர்களது உறவினர் தும்பல்மாமஞ்சியைச் சேர்ந்தவர் சுரேஷ் 42, இவர்கள் மூவரும் காரில் ராமேஸ்வரம் சென்று விட்டு தேவகோட்டை வழியாக தர்மபுரிக்கு திரும்பினர். காரை தினேஷ் ஓட்டி வந்தார். நேற்று மாலை உதையாச்சி அருகே வரும் போது நாய் குறுக்கே வந்துள்ளது.
டிரைவர் காரை திருப்பியதில் கார் கட்டுப்பாட்டை இழந்து அருகில் உள்ள பள்ளத்தில் கவிழ்ந்து உருண்டது. செல்வமும், உறவினர் சுரேஷும் படுகாயமடைந்தனர்.

