/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
திருப்புவனத்தில் டூவீலர் ஸ்டாண்ட்; வாகன ஓட்டிகள் வலியுறுத்தல்
/
திருப்புவனத்தில் டூவீலர் ஸ்டாண்ட்; வாகன ஓட்டிகள் வலியுறுத்தல்
திருப்புவனத்தில் டூவீலர் ஸ்டாண்ட்; வாகன ஓட்டிகள் வலியுறுத்தல்
திருப்புவனத்தில் டூவீலர் ஸ்டாண்ட்; வாகன ஓட்டிகள் வலியுறுத்தல்
ADDED : மே 01, 2024 07:51 AM

திருப்புவனம் : திருப்புவனத்தில் டூ வீலர் ஸ்டாண்ட் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் வலியுறுத்தியுள்ளனர்.
திருப்புவனத்தைச் சுற்றியுள்ள அல்லிநகரம், கலியாந்துார், பழையனுார் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் இருந்தும் பலரும் தினசரி மதுரை சென்று வருகின்றனர். கிராமங்களில் இருந்து மதுரைக்கு நேரடி பஸ் வசதி இல்லாததால் பலரும் திருப்புவனம் வரை டூவீலரில் வந்து அதன்பின் பஸ்சில் செல்கின்றனர். அதுபோல கிராமப்புற பள்ளிகள், ஆரம்ப சுகாதார நிலையங்களில் பணிபுரிபவர்கள் என பலரும் மதுரை உள்ளிட்ட பகுதிகளில் இருந்து திருப்புவனம் வரை பஸ்சில் வந்து அதன்பின் டூ வீலர்களில் சம்பந்தப்பட்ட கிராமங்களுக்கு சென்று வருகின்றனர். இவர்கள் டூவீலர்களை பெரும்பாலும் திருப்புவனத்தில் சாலையின் இருபுறங்களிலும் வரிசையாக நிறுத்தி விட்டு செல்கின்றனர். சாலையோரம் டூவீலர்களை பகல் முழுவதும் நிறுத்தி செல்வதால் அடிக்கடி போக்குவரத்து நெரிசலும் ஏற்படுகிறது.
திருப்புவனத்தில் புதிதாக பேரூராட்சி அலுவலக கட்டடம் கட்டப்பட்டு வரும் நிலையில் அலுவலகம் புதிய கட்டடத்திற்கு மாற்றப்பட்ட பின் பழைய கட்டடத்தில் டூவீலர் ஸ்டாண்ட் அமைக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் வலியுறுத்தியுள்ளனர்.