/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
சிவகங்கையில் டூவீலர் திருட்டு: ஒருவர் கைது
/
சிவகங்கையில் டூவீலர் திருட்டு: ஒருவர் கைது
ADDED : மே 06, 2024 12:13 AM
சிவகங்கை : சிவகங்கையில் டூவீலர் திருடியவரை போலீசார் கைது செய்து, அவரது கூட்டாளியை தேடி வருகின்றனர்.
அரியலுார் மாவட்டம், செம்மண் பள்ளத்தை சேர்ந்தவர் மாயவேல் 50. இவர் சிவகங்கையில் ஒரு ஒப்பந்ததாரரிடம் வேலை பார்க்கிறார். மே 1 ம் தேதி இவரது டூவீலரை நேரு பஜாரில் நிறுத்தியிருந்தார். மர்ம நபர்கள் அவரது டூவீலரை திருடிச்சென்றனர்.
போலீஸ் விசாரணையில் பரமக்குடி அருகே பார்த்திபனுார் கயிலேஸ்வரன் 20, திருடியது தெரிந்தது. இவரிடம் நடத்திய விசாரணையில், ராஜபாளையத்தை சேர்ந்த சக்திகணேஷ் என்பவருடன் சேர்ந்து பல்வேறு டூவீலர் திருட்டி ல் ஈடுபட்டது தெரிந்தது.
இவர்கள் இருவரும் திண்டுக்கல் மாவட்டம், வேடசந்துாரில் டூவீலர் திருடியுள்ளனர். பின்னர் ராமநாதபுரம் மாவட்டம், பார்த்திபனுாரில் டூவீலரில் சென்ற பெண்ணிடம் செயின் பறிக்கும் முயற்சியில் இறங்கினர். சிவகங்கை குற்றப்பிரிவுபோலீசார் கயிலேஸ்வரனை கைது செய்து, சக்திகணேைஷ தேடி வருகின்றனர்.