/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
கோயில் பிரகாரத்தில் அத்துமீறும் டூவீலர்கள்
/
கோயில் பிரகாரத்தில் அத்துமீறும் டூவீலர்கள்
ADDED : மார் 02, 2025 05:35 AM
பிரான்மலை: சிங்கம்புணரி அருகே பிரான்மலையில் கோயில் அருகே பக்தர்களுக்கு இடையூறாக இளைஞர்கள் டூவீலர்களை வேகமாக ஓட்டி அச்சுறுத்துவதால்அடிக்கடி விபத்து நடக்கிறது.
திருக்கொடுங்குன்றநாதர் கோயில் முன் கீழரத வீதிக்கு வரும் வெளிப்பிரகாரத்தில் இளைஞர்கள் சிலர் டூவீலர்களில் வேகமாக வந்து பக்தர்களுக்கு தொடர்ந்து அச்சுறுத்தல் ஏற்படுத்தி வருகின்றனர்.
இதனால் அப்பகுதியில் நடந்து செல்லும் பக்தர்கள் அச்சமடையும் நிலை உள்ளது. இதுவரை டூவீலர்கள் மோதியதில் பக்தர்கள் சிலர் விழுந்து காயமடைந்துஉள்ளனர்.
எனவே கீழரத வீதியிலிருந்து கோயிலுக்கு செல்லும் பிரகாரத்தில் டூவீலர்களை அனுமதிக்காமல் தெப்பக்குளம் அருகே தடுப்புகளை அமைக்க பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.