/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
புதுப்பித்து இரண்டு ஆண்டுகளான ரோடு ரூ.87 லட்சத்தில் புதுப்பிப்பு: மக்கள் புகார்
/
புதுப்பித்து இரண்டு ஆண்டுகளான ரோடு ரூ.87 லட்சத்தில் புதுப்பிப்பு: மக்கள் புகார்
புதுப்பித்து இரண்டு ஆண்டுகளான ரோடு ரூ.87 லட்சத்தில் புதுப்பிப்பு: மக்கள் புகார்
புதுப்பித்து இரண்டு ஆண்டுகளான ரோடு ரூ.87 லட்சத்தில் புதுப்பிப்பு: மக்கள் புகார்
ADDED : மே 03, 2024 05:30 AM
காரைக்குடி: காரைக்குடியில் ரோடு அமைத்து சில ஆண்டுகளே ஆன நிலையில், மீண்டும் ரோட்டை உடைத்து நெடுஞ்சாலைத்துறையினர் ரோடு அமைப்பதால் ரூ 87 லட்சம் வீணாவதாக மக்கள் புகார் கூறுகின்றனர்.
காரைக்குடி ராஜிவ் காந்தி சிலை அருகே கல்லுாரி சாலையில் 800 மீட்டர் துாரத்திற்கு நெடுஞ்சாலை துறை சார்பில் ரோடு அமைக்கும் பணி நடந்து வருகிறது. கடந்த 2021 - 22ம் ஆண்டு பாதாள சாக்கடை திட்ட பணி நடந்ததால் ரோடு போடப்பட்ட நிலையில் தற்போது மீண்டும் புதிதாக ரோடு அமைப்பதாக புகார் எழுந்துள்ளது.
சமூக ஆர்வலர் ச. திருஞானம் கூறுகையில்: கடந்த 2019ம் ஆண்டு நெடுஞ்சாலைத்துறை சார்பில் கல்லுாரி சாலையில் ரோடு அமைக்க ரூ. 87 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.
இந்நிலையில் 2021--22 ஆம் ஆண்டு பாதாளச் சாக்கடை திட்டத்தில் கல்லுாரி சாலையில் ரோடு பணி நடந்தது. நகராட்சி நிர்வாகம் நிதி வழங்கி நெடுஞ்சாலை துறை சார்பில் ரோடு போடப்பட்டது.
2 வருடமே ஆன நிலையில் தற்போது மீண்டும் ரோடு புதுப்பிக்கும் பணி நடக்கிறது. நன்றாக இருக்கும் சாலை மீது மீண்டும் ரோடு போடுவதால் மக்களின் வரிப்பணம் வீணாகிறது.
நெடுஞ்சாலைத்துறை உதவி கோட்ட பொறியாளர் அரிமுதன் கூறுகையில்:
நெடுஞ்சாலைத்துறை சார்பில் 5 ஆண்டுகளான சாலைகள் பி.பி.எம்.சி., திட்டத்தின் கீழ் மீண்டும் சாலைப் பணி நடக்கிறது. 5 ஆண்டு நிறைவடையாமல் சாலை பணி நடைபெறாது. கொப்புடைய அம்மன் கோயில் பின்புறம் செல்லும் ஒரு வழிச்சாலை நகராட்சிக்கு சொந்தமானது. நெடுஞ்சாலைத்துறைக்கு சொந்தமானது அல்ல என்றார்.