/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
வசதி இல்லாத குழந்தைகள் வளர்ச்சித்திட்ட அலுவலகம்
/
வசதி இல்லாத குழந்தைகள் வளர்ச்சித்திட்ட அலுவலகம்
ADDED : செப் 18, 2024 04:50 AM

சிங்கம்புணரி : சிங்கம்புணரி அருகே எஸ்.புதுாரில் குழந்தைகள் வளர்ச்சித் திட்ட அலுவலகத்தில் கழிப்பறை உள்ளிட்ட வசதிகள் இல்லாமல் ஊழியர்கள் அவதிப்படுகின்றனர்.
இவ்வொன்றியத்தில் உள்ள 69 அங்கன்வாடி மையங்களில் 68 அங்கன்வாடி ஊழியர்களும் உதவியாளர்கள் 37 பேரும் பணியாற்றுகின்றனர். இவர்களுக்கான குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலகம் எஸ்.புதுார் ஒன்றிய அலுவலகம் எதிரில் உள்ளது. இங்கு 5க்கும் மேற்பட்ட ஊழியர்கள் பணியாற்றுகின்றனர்.
இந்த அலுவலகத்தில் அடிப்படை வசதி இல்லாமல் ஊழியர்கள் அவதிப்படுகின்றனர். குறிப்பாக கழிப்பறை இல்லை. இதனால் இங்கு வரும் ஊழியர்கள் மிகவும் சிரமப்படுகின்றனர்.
அலுவலகத்தின் முன்புறம் மின்விளக்குகள் இல்லாததால் மாலை 6:00 மணிக்கு பிறகு பணி நிமித்தமாக அலுவலகத்திற்கு வர ஊழியர்கள் பயப்படுகின்றனர்.கட்டடத்தை சீரமைத்து கழிப்பறை உள்ளிட்ட அடிப்படை வசதிகளை செய்து தர அங்கன்வாடி ஊழியர்கள் வலியுறுத்தி உள்ளனர்.