ADDED : ஆக 31, 2024 06:19 AM
மானாமதுரை : மானாமதுரை ஒன்றிய, நகர தி.மு.க., கூட்டம் அமைச்சர் பெரியகருப்பன் தலைமையில் நடந்தது. கூட்டத்தில் எம்.எல்.ஏ., தமிழரசி, நகராட்சி தலைவர் மாரியப்பன் கென்னடி, திருப்புவனம் பேரூராட்சி தலைவர் சேங்கை மாறன், ஒன்றிய செயலாளர்கள் துரை ராஜாமணி, அண்ணாத்துரை, நகர செயலாளர் பொன்னுச்சாமி, மானாமதுரை ஊராட்சி ஒன்றிய தலைவர் லதா மற்றும் ஒன்றிய, நகர கவுன்சிலர்கள், நிர்வாகிகள், தொண்டர்கள் கலந்து கொண்டனர்.
*இளையான்குடி ஒன்றிய நகர, தி.மு.க. உறுப்பினர் கூட்டம் நடந்தது. இதில் முன்னாள் எம்.எல்.ஏ., மதியரசன், திருப்புவனம் பேரூராட்சி தலைவர் சேங்கைமாறன், ஒன்றிய செயலாளர் தமிழ்மாறன், செல்வராசன், வெங்கட்ராமன், நகர செயலாளர் நஜூமுதீன், கண்ணமங்கலம் கூட்டுறவு சங்க தலைவர் தமிழரசன், பேரூராட்சி துணைத் தலைவர் இப்ராகிம், தகவல் தொழில்நுட்ப அணி அன்பரசன் மற்றும் ஒன்றிய, பேரூராட்சி கவுன்சிலர்கள் நிர்வாகிகள் தொண்டர்கள் கலந்து கொண்டனர்.