/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
ஆட்சியில் பங்கு கேட்கவே தி.மு.க.,வை மிரட்டுகிறார் திருமாவளவன்; மத்திய அமைச்சர் முருகன் குற்றச்சாட்டு

ADDED : செப் 16, 2024 05:15 AM
சிவகங்கை: ''ஆட்சியில் பங்கு கேட்கவே தி.மு.க.,வை திருமாவளவன் மிரட்டுகிறார்'' என கொல்லங்குடியில் மத்திய இணை அமைச்சர் முருகன் தெரிவித்தார்.
அவர் கூறியதாவது:
யுடியூப் சேனல்களை வரைமுறைப்படுத்த மத்திய அரசு கருத்து கேட்டுள்ளது. தனது தேவைக்கும், ஆட்சியில் பங்கு கேட்பதற்காக தான் தி.மு.க.,வை திருமாவளவன் மிரட்டுகிறார். கோயில் யானைகளின் பராமரிப்பை மேம்படுத்த வேண்டும்.
விடுதலை சிறுத்தை கட்சி ஒட்டுமொத்த தலித்துகளின் கட்சி அல்ல. பா.ஜ., மற்றும் பா.ம.க., பற்றி திருமாவளவன் பேசக்கூடாது.
அமெரிக்கா சென்று வந்த முதல்வர் ஸ்டாலின் தொழில் முதலீடு குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்.
தே.ஜ., கூட்டணியினருக்கு மத்திய அமைச்சரவையில் பங்கு தந்துள்ளோம்.
தி.மு.க., அமைச்சரவையில் அதன் கூட்டணி கட்சியினருக்கு பங்கு இருக்கிறதா என்பது குறித்து அவர்கள் முடிவு செய்ய வேண்டும். தமிழக மீனவர்களை மொட்டை அடித்த இலங்கை கடற்படையை கண்டிக்கிறேன்.
பழநியில் தி.மு.க., முருகன் மாநாடு நடத்த காரணமே பா.ஜ.,விற்கு முருக பக்தர்களின் ஆதரவை பார்த்து பயந்து தான் என்றார்.