/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
தேவகோட்டை பஸ் ஸ்டாண்டில் சுகாதாரமற்ற கழிப்பறையால் அபாயம்
/
தேவகோட்டை பஸ் ஸ்டாண்டில் சுகாதாரமற்ற கழிப்பறையால் அபாயம்
தேவகோட்டை பஸ் ஸ்டாண்டில் சுகாதாரமற்ற கழிப்பறையால் அபாயம்
தேவகோட்டை பஸ் ஸ்டாண்டில் சுகாதாரமற்ற கழிப்பறையால் அபாயம்
ADDED : மார் 27, 2024 06:56 AM
தேவகோட்டை : தேவகோட்டை பஸ் ஸ்டாண்டிற்கு தினமும் 300க்கும் மேற்பட்ட பஸ்கள் வந்து செல்கின்றன. தினமும் ஆயிரக்கணக்கான பயணிகள் வருகின்றனர். இந்த பஸ் ஸ்டாண்டில் இலவச கழிப்பறை, கட்டண கழிப்பறை என இரண்டும் இருந்தும் பலனில்லை.
பயணிகள் அவசரமாக இயற்கை உபாதைகளை போக்க மிகவும் கஷ்டப்படுகின்றனர். இலவச கழிப்பறையை சுத்தம் செய்யாமல் இருப்பதால் பயணிகள் அவதிப்படுகின்றனர். கழிப்பறைக்குள் செல்ல முடியவில்லை. துர்நாற்றம் வீசுகிறது. அவசரமாக வரும் டிரைவர், கண்டக்டர்கள் படும் அவதி சொல்லி மாளாது. அருகில் உள்ள கடைக்காரர்கள் நாள் முழுவதும் துர்நாற்றத்தில் படும் கஷ்டத்தை நகராட்சி பணியாளர்களிடம் குமுறலாய் கொட்டி வருகின்றனர்.
ஆனாலும் ஒரு பயனும் இல்லை. கழிப்பறைக்கு வெளியே சிறுநீர் பரவி கிடக்கிறது. இதனால் நோய் பரவும் அபாயம் உள்ளது.
சில ஆண்டுகளுக்கு முன்பு இருந்த நகராட்சி கமிஷனர் உத்தரவின் பேரில் வாரம் ஒருமுறை பஸ் ஸ்டாண்டை கழுவி விட்டனர். அவரும் அவ்வப்போது பார்வையிட்டார். ஆனால் இப்போது பஸ் ஸ்டாண்டை கவனிப்பதில்லை. கழிப்பறையை சுத்தம் செய்வதில்லை. இன்னொரு புறம் குப்பைகளை கொட்டி சரியாக அள்ளுவதில்லை. துர்நாற்ற பஸ் ஸ்டாண்டாக திகழ்கிறது. நகராட்சி அதிகாரிகள் பஸ் ஸ்டாண்டு ஒரு முறை பார்வையிட்டு மக்களின் அவதியை சரி செய்யவேண்டும்.

