/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
வாகனங்களில் ஆபத்தான பயணங்கள் நடவடிக்கைக்கு வலியுறுத்தல்
/
வாகனங்களில் ஆபத்தான பயணங்கள் நடவடிக்கைக்கு வலியுறுத்தல்
வாகனங்களில் ஆபத்தான பயணங்கள் நடவடிக்கைக்கு வலியுறுத்தல்
வாகனங்களில் ஆபத்தான பயணங்கள் நடவடிக்கைக்கு வலியுறுத்தல்
ADDED : ஜூலை 01, 2024 06:09 AM

திருப்புவனம் : திருப்புவனம் பகுதியில் நாளுக்கு நாள் ஆபத்தான முறையில் வாகனங்களில் பயணங்கள் மேற்கொள்வதால் விபத்துகளில் உயிரிழப்பு ஏற்பட வாய்ப்புள்ளதாக பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர்.
திருப்புவனத்தைச் சுற்றிலும் 100க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன. கிராமப்புற மக்கள் பலரும் தங்களது தேவைகளுக்கு ஷேர் ஆட்டோ, டூ வீலர் உள்ளிட்டவற்றில் திருப்புவனம் வந்து செல்கின்றனர்.
இங்கு அரசு, தனியார் பள்ளிகள் அதிகம் உள்ளன. இவற்றில் படிக்கும் மாணவ, மாணவியர்களை பெற்றோர்கள், உறவினர்கள் தங்களது டூவீலர்களில் விதிகளை மீறி அளவிற்கு அதிகமாக ஏற்றி செல்கின்றனர்.
லைசென்ஸ் மற்றும் போதிய ஆவணமின்றி மாணவ, மாணவியர்களை சிறு வாகனங்களில் போக்குவரத்து விதிகளை மீறி ஏற்றி செல்வதால் விபத்துகள் ஏற்படுகின்றன. பெரிய அளவில் விபத்துகள் ஏற்பட்டால் மட்டுமே போலீசார் வழக்கு பதிவு செய்கின்றனர். பள்ளிகள் திறக்கப்பட்டுள்ள நிலையில் டூ வீலர், ஆட்டோ உள்ளிட்டவற்றில் விதி மீறி பயணங்கள் அதிகரித்த வண்ணம் உள்ளது. இது குறித்த உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.